வேத கட்டளைகள் வரத் தொடங்கி சில நாட்கள் கழிந்த பின் ஒருவித தேக்க நிலை ஏற்பட்டது இதனால் நபி அவர்கள் சஞ்சலமடைந்தார்கள்.
இதற்கு அறிஞர்கள் கூறும் போது புதுமையான ஒரு சூழலில் திடீரென்று வேத கட்டளைகள் வந்ததனால் ஏற்பட்ட அதிர்ச்சியிலிருந்து நபி (ஸல்) அவர்கள் விடுபடுவதற்காகவும் தொடர்ந்து பல வேத வசனங்களை பெற தம்மை ஆயத்தம் செய்து கொள்வதற்காகவே அத்தகைய தேக்க நிலை ஏற்பட்டதாக கூறுகின்றனர்.
இரண்டாவதாக இறங்கிய வசனம், “நபியே! நீர் எழுந்து மக்களை எச்சரிக்கை செய்கிறாக!
இந்தக் கட்டளை கிடைத்தவுடன் நபிகளார்(ஸல்) தமது நெருங்கிய உறவினர்களுக்கும் நண்பர்களுக்கு ஏகத்துவத்தை எத்திவைக்க வேண்டும் என்று உறுதி எடுத்துக் கொண்டார்கள்.
தொடரும் வேத வெளிப்பாடுகளை எதிர்நோக்கியவர்களாக மக்கத்து மலைகளுக்கிடையே சென்று கொண்டிருந்த போது வானவர் ஜிப்ரீல்(அலை) தோன்றி ஏகத்துவக் கொள்கையை செயல்படுத்தி காட்டும் முறையை முறையான தொழுகை முறையை காண்பித்து அதற்கு முன் தொழுகையின் நுழையும் முன் தூய்மை செய்யும் முறையும் கற்றுக் கொடுத்து இரண்டு ரக்அத்துகள் தொழுதும் காட்டினார்கள் அப்படியே நபிகளார் செய்தார்கள்.
தம் வீட்டுக்கு வந்தவுடன் நபிகளாரின் அமைதியையும் மகிழ்வையும் கண்ட மனைவி கதீஜா அம்மையார் விளக்கம் கேட்ட போது தம்மிடம் இவரையில் வந்து தூய்மை செய்யும் முறையுடன் தொழும் முறையையும் கற்றுக் கொடுத்துவிட்டு சென்றதை கூறினார்கள் உடனே கதீஜா ஏகத்துவ கொள்கையை ஏற்றதோடு தம்மை பின்பற்றி தொழும் படியும் கதீஜா (ரலி)வுக்கு கூறினார்கள் அதை ஏற்று கதீஜா (ரலி) அம்மையார் இஸ்லாத்தை ஏற்று நபிகளாரை பின்பற்றி தொழுதார்கள்.
நபிகளாரின் அரவணைப்பில் வளர்ந்து வந்த நபியின் பெரிய தந்தையின் மகனார் அலி (ரலி) அவர்கள் ஒரு தினம் வீட்டுக்கு வந்த சமயம் நபியும், கதீஜா அம்மை யாரும் தொழுது கொண்டிருந்ததைக் கண்டு வியந்தவராக என்ன செய்கிறீர்கள் என்று வினாவினார். அதற்கு நபியவர்கள் நாங்கள் அல்லாஹ் ஒருவனே வணங்க தகுதியானவன் என்று ஏற்ற ஏகத்துவக் கொள்கையை தொழுகையின் மூலம் வணங்கி வருகிறோம். நான் அவனின் தூதுவர். எனவே நீரும் இதை ஏற்றுக் கொள்ளும் என்று கூற. இதற்கு முன் இதுபோன்று நான் கண்டதில்லையே! என்று வியப்புடன் அலி அவர்கள் கேட்டார்கள்.
நான் எனது தந்தையிடம் அனுமதி கேட்காமல் எதையும் செய்வதில்லை என்று கூறினார். அதற்கு நபிகளார் அப்படியானால் பலர் முன்னிலையில் அனுமதி கேட்காமல் தனிமையில் கேட்பீராக என்று அறிவுறுத்தினார்கள். அடுத்த நாள் காலையில் சிறுவர் அலி சிரித்த முகத்துடன் வந்து அல்லாஹ்வை வணங்க அபூதாலிபின் அனுமதி எதற்கு என்றுணர்ந்தவராக நபிகளாரை கலிமா சொல்லி இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டார் இவரே முஸ்லிம்களில் இரண்டாமவர்.