النَّبِيَّ صلّى الله عليه وسلّم كانَ إِذَا فَرَغَ مِنْ طَعَامِهِ ـ وَقالَ مَرَّةً: إِذَا رَفَعَ مائِدَتَهُ ـ، قالَ: الحَمْدُ للهِ الَّذِي كَفَانَا وَأَرْوَانَا، غَيْرَ مَكْفِيٍّ وَلاَ مَكْفُورٍ )

அல்லாஹ்வின் தூதர் அவர்கள் உணவு உண்டு முடித்து விட்டால் இவ்வாறு பிரார்த்தனை செய்வார்கள்: நமக்கு (உணவை) போதுமாக்கி மேலும் அவனே நமக்கு தாகம் தீர்த்தான் அவைகளை நமக்கு தடுக்காமலும், குறைக்காமலும் வழங்கிய அந்த அல்லாஹ்வுக்கே எல்லா புகழும் உண்டாகுக!

மஆலிமுஸ் ஸுன்னதின் நபவிய்யா 

ஹதீஸ் 2647 – 2649

இன்னும் சில பிரார்த்தனைகள்.

الْحَمْدُ لِلَّهِ الَّذِي أَطْعَمَ وَسَقَى، وَسَوَّغَهُ، وَجَعَلَ لَهُ مَخْرَجا.

அல்லாஹ்வுக்கே எல்லாப் புகழும் அவனே அருள் செய்து உணவையும் பருகநீரையும் வழங்கினான் மேலும் அவைகள் சிரமமின்றி இலகுவான முறையில் சென்றடைவதற்கு வழி வகுத்தான் மேலும் அந்த உணவுகளின் மூலம் பெறப்படும் சத்துக்களை உடல் எடுத்துக் கொண்ட பிறகு அதன் கழிவுகளை உடலிலிருந்து இலகுவான முறையில் வெளியேறுவதற்கும் வழி வகுத்தான்..

شرح سنن أبي داود عبد المحسن العباد

இன்னும் சில பிரார்த்தனைகள்.

الحَمْدُ لله رَبِّنَا، غَيْرَ مَكْفِيٍّ وَلاَ مُوَدَّعٍ  ، وَلاَ مُسْتَغْنًى، رَبُّنَا

இதன் கருத்து

இந்த உணவை வீட்டும் நீ தேவையற்றவன் எந்த உணவின் பாலும் உனக்கு தேவையில்லை இன்னும் நீ வழங்கிய அந்த உணவை இதோடு முடித்து விடப் போவதில்லை மென்மேலும் வழங்கிக் கொண்டே இருப்பாய் இன்னும் எங்கள் ரட்சகா நீ வழங்கும் அந்த உணவிற்கு நாங்கள் மிகவும் தேவையுடையவர்கள் ஒருபோதும் அதை விட்டு தேவையற்ற இருக்கவே முடியாது.
شرح رياض الصالحين / حطيبة

ஒரு உணவு நூற்றுக்கணக்கான நபர்களின் உழைப்பிற்கு பின்னரே நம்மை வந்தடைகின்றது. அதை அல்லாஹ் நம்மவர்களுக்கு மிக எளிதாக வழங்கியுள்ளான் முதலில் நாட்டு நடுவது பின்னர் அது முளைக்கின்றது அறுவடை செய்து அதை தானியங்களையும் தூசிகளையும் அகற்றப்பட்டு பின்னர் அரைக்கப்பட்டு மாவாக்கப்பட்டு பிறகு அதை சமைக்கப்படுகிறது. எனினும் பெரும்பான்மையான நேரங்களில் நாம் அவைகளைப் பற்றி கொஞ்சமும் சிந்திப்பதில்லை எனவே அல்லாஹ் நமக்கு வழங்கி இருக்கும் அந்த உணவை நாம் உண்ணும் சமயம் அவனது நினைவோடு நன்றி செலுத்தியவர்களாக நாம் உண்ண வேண்டும்.
شرح رياض الصالحين ابن عثيمين

ஒரு மிடர் குடிக்கும்போதும்  ஹதீஸ்   2648

அடியான் ஒரு கவளம் உண்ணும் போதும் ஒரு மிடர் குடிக்கும்போதும் பிறகு தன்னை புகழ்வதை அல்லாஹ் விரும்புகிறான்.
உணவு என்பது அல்லாஹ் வழங்கும் மாபெரும் அருளாகும் ஒரு மனிதன் உணவையோ, பானத்தையோ இழக்கும் போது தான், அதன் மதிப்பை அவன் உணருவான் ஒருவர் கோடை காலத்தில் பாலைவனத்தில் சிக்கிக் கொண்டவர் தண்ணீருக்கும் உணவிற்கும் அவதிப்படும்போதுதான் அதன் உண்மையான மதிப்பை அவன் உணர முடியும்.‌‌
பனூ உமையா மன்னர்களில் ஒர் மன்னரிடம் உங்களுக்கு நீர் கிடைக்காத போது எதை கொடுத்து அதை அடைய முன்வருவீர்கள் என்று கேட்கப்பட்டது அதற்கு அவர் எனது ஆட்சியின் பாதியை கொடுத்து விடுவேன் என்றார். அதே போல் சிறுநீர் வராத பொழுது அதை வெளியேற்றுவதற்கு எதை கொடுப்பீர்கள் என்று கேட்டபோது எனது ஆட்சியின் மீத பாதையை கொடுத்து அதை வெளியேற்றுவேன் என்றார். இதன் மூலம் ஒரு மனிதனுக்கு ஒரு மிடர் தண்ணீர் சென்று அது முறையாக அதன் கழிவு வெளியேறுவதற்கு அவரது ஆட்சியைக். கூட. கொடுக்க முற்படுவார் அப்படியானால் ஒவ்வொரு நாளும் நாம் உண்ணும் உணவும் குடிக்கும் பானங்களும் முறையாக சென்று அதன் கழிவுகள் வெளியேறுவதற்கும் நாம் என்ன நன்றி செய்திருக்கின்றோம் என்பதை சற்று சிந்தித்து பார்க்க வேண்டும்.
شرح رياض الصالحين ابن حطيبة

0
Would love your thoughts, please comment.x
()
x