سَمِعْتُ النَّبِيَّ صلّى الله عليه وسلّم يَقُولُ: المُؤْمِنُ يَأْكُلُ في مِعًى وَاحِدٍ، والْكافِرُ يَأْكُلُ في سَبْعَةِ أَمْعَاءٍ

இப்னு உமர் (ரலி) எந்த உணவையும் உண்ணும் போது தன்னோடு ஒரு ஏழையை அழைத்தே உண்பார்கள். ஒரு நாள் நான் ஒரு நபரை அவர்களோடு உண்ணுவதற்கு அழைத்து வந்தேன். அவர் மிக அதிகமாக சாப்பிட்டார். அப்போது என்னை அழைத்து நாஃபியே! இனி என்னோடு இவரை சேர்த்துக் கொள்ள வேண்டாம். நான் நபி அவர்களிடம் செவியுற்றுருக்கிறேன். நம்பிக்கை கொண்டவர் ஒரே ஒரு குடலில் சாப்பிடுவார். நிராகரிப்பவனோ 7 குடலில் சாப்பிடுவார்.

இந்த அறிவிப்பில் இப்னு உமர் (ரலி) அவர்கள் தனக்கு நபியவர்கள் (ஸல்) கூறிய ஒரு செய்தியை குறிப்பிடுகிறார்கள். “  நம்பிக்கை கொண்டவர் ஒரே ஒரு குடலில் சாப்பிடுவார். நிராகரிப்பவனோ 7 குடலில் சாப்பிடுவார் “ 

இந்த அறிவிப்பில் வந்துள்ள ஏழு குடலில் சாப்பிடுவார் என்பதன் விளக்கம் :

நிராகரிப்பவர்கள்  உலக வாழ்க்கையை மட்டுமே நோக்கமாகக் கொண்டு இவ்வுலகிலேயே எல்லாவித இன்பங்களையும் அனுபவித்துக் கொள்ள வேண்டும் என்று பேராவல் கொண்டிருப்பார்கள். ஆனால் நம்பிக்கை கொண்டோர்கள் மறுமையை நம்பி அங்கு கிடைக்கும் இன்பங்களை முன்வைத்து வாழ்வார்கள். மேலும் முஃமின் என்பவர் உண்ணும் உணவை ஆகுமான முறையில் தேடிக்கொண்டும், அதை உண்ணும் போது அல்லாவின் பெயரை கூறியும், போதுமான அளவு உண்ட பின் அல்லாஹ்வை புகழ்ந்து கொள்கிறார் அதே சமயம் நிராகரிப்பவர் தடுக்கப்பட்ட வழிகளில் சம்பாதித்து உணவின் மீது பேராசை கொண்டு உணவை அல்லாவின் பெயர் கூறாமல் உண்பதினால் ஏழு குடலில் உண்ணுகிறார் என்று வந்துள்ளது.

ஏழு குடல்கள் என்பது:

ஒரு மனிதனுக்கு ஒரு இரைப்பை அதனை அடுத்து மூன்று சிறுகுடல்களும் பின்னர் மூன்று பெருகுடல்கள் இருப்பதாக கூறுகின்றனர்.  

இந்த அறிவிப்பின் இறுதியில் இந்த மனிதரை அழைத்து வர வேண்டாம் என்று சொன்னது.

இவர் நிராகரிப்பாளர் என்பதினாலில்லை. மாறாக நிராகரிப்பவர்களைப் போன்று உணவின் மீது பேராவல் கொண்டு அதிகமாக சாப்பிடும் பழக்கம் உடையவராக இருக்கிறார். இது அல்லாஹ் விரும்பாத ஒரு செயலாகும் எனவே இது போன்று குணமுடையவர்களோடு நான் சாப்பிடுவதை வெறுக்கிறேன் என்று கூறினார்கள்.

كتاب اللامع الصبيح بشرح الجامع الصحيح ١٤/٦    / وفيق الرب المنعم بشرح صحيح المسلم ٦/١٢٧

நம்பிக்கையாளர்களின் அழகிய பண்பான மறுமையை முன்வைத்து, கிடைத்ததைக் கொண்டு போதுமாக்கி, மற்றவர்களுக்கும் கொடுத்து உண்ணும் பழக்கத்தை அல்லாஹ் நம் அனைவருக்கும் அருள்வானாக!

0
Would love your thoughts, please comment.x
()
x