عَنْ جَابِرِ بْنِ عَبْدِ اللهِ: أَنَّهُ سَمِعَ النَّبِيَّ صلّى الله عليه وسلّم يَقُولُ: (إِذَا دَخَلَ الرَّجُلُ بَيْتَهُ، فَذَكَرَ الله عِنْدَ دُخُولِهِ وَعِنْدَ طَعَامِهِ، قَالَ الشَّيْطَانُ: لاَ مَبِيتَ لَكُمْ وَلاَ عَشَاءَ

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) கூற நான் கேட்டுள்ளேன். யாரேனும் ஒருவர் தனது வீட்டில் நுழையும் போதும், உணவு உண்ணும் போதும், அல்லாஹ்வை நினைவு கூர்ந்தால் அப்போது ஷைத்தான் தனது நண்பர்களிடம் கூறுகிறான். இப்போது இவ்வீட்டில் உங்களுக்கு உணவும் இல்லை, தங்க இடமுமில்லை அதே சமயம் அம்மனிதர் வீட்டில் நுழையும் போதும்., உணவு உண்ணும் போதும் அல்லாஹ்வை நினைவு கூறாமலிருந்து விட்டால், அப்போது ஷைத்தான் தனது நண்பர்களிடம் உங்களுக்கு இங்கே தங்க இடமும், உண்ண உணவும், கிடைத்து விட்டது. அறிவிப்பாளர் ஜாபிர் இப்னு அப்துல்லாஹ் (ரலி)

         இந்த அறிவிப்பில் ஒருவர் வீட்டில்  காலையிலோ, மாலையிலோ நுழைந்தால்  அல்லாஹ்வின் பெயரைக்  கூறி நுழைவதை வலியுறுத்தி கூறப்பட்டுள்ளது. இதனால் அவர் ஷைத்தான் தீங்கிலிருந்து  பாதுகாக்கப்படுகிறார். அதை போல் உண்ணும் பொழுது கூறினால்.  அவரது உணவும் ஷைத்தான் எடுப்பதில் இருந்து பாதுகாக்கப்படுகிறது. நபிகளார் அதோடு வீட்டின் நுழையும் போது பின் வரும்  துஆவும் ஓதிக் கொள்வார்கள்.

بسم الله ولجنا وبسم الله خرجنا وعلى الله ربنا توكلنا اللهم إني أسألك خير المولج وخير المخرج 

பிறகு பல்துலக்கி கொள்வார்கள் தனது வீட்டாருக்கு சலாம் கூறுவார்கள் என்ற ஒழுக்கங்களும் பிற அறிவிப்புகளின் மூலம் வந்துள்ளது. ஒருவர் நுழையும் போது பிஸ்மி கூறிவிட்டு உணவு உண்ணும் போது கூறவில்லை எனில் ஷைத்தான் வீட்டில் தங்குவது தடைபட்டு போனாலும் இவரது உணவில் அவனுக்கு பங்கு கிடைத்து விடுகிறது எனவே வீட்டில் நுழையும் போதும் உண்ணும் போதும் அல்லாஹ்வின் நினைவோடு இருப்பதற்கு முயல வேண்டும்.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) கூறினார்கள். இடது கையால் உண்ண வேண்டாம். ஏனெனில் ஷைத்தான் தான், இடது கையில் உண்ணுவான்.

அறிவிப்பாளர் : ஜாபிர் இப்னு அப்துல்லாஹ் (ரலி)

அல்லாஹ்வின் தூதர் கூறினார்கள் உங்களில் ஒருவர் உணவு சாபிட்டால் தனது வளக்கரத்தால் உண்ணவும். ஏதேனும் குடித்தால் வலது கரத்தால் குடிக்கவும். ஏனெனில் ஷைத்தான்தான், இடது கரத்திலே உண்ணவும் குடிக்கவும் செய்வான்.

அறிவிப்பாளர் : அப்துல்லா இப்னு உமர் (ரலி)

இந்த அறிவிப்பில் நபி (ஸல்) அவர்கள் இடது கையால் உண்பதையும் குடிப்பதையும் தடுத்திருப்பதோடு, அதன் காரணத்தையும் வெளிபடுத்தியுள்ளார்கள். அவ்வாறு செய்வது சைத்தானின் செயலாகும். ஷைத்தான் மனிதர்களின் பகிரங்கமான விரோதியாவான். எல்லா நிலைகளிலும் அவனுக்கு மாறு செய்வதை நபிகளார் வலியுறுத்தியுள்ளார்கள். இதன்படி சில அறிஞர்களிடம் இடது கையில் உண்பதும், குடிப்பதும் ஹராம் என்றும் கூறியுள்ளார்கள்.

நம்மில் சிலர் வலது கையால் சாப்பிடுவதையும் குடிப்பதையும் கடைப்பிடிக்கின்றனர். அதே சமயம் சாப்பிட்டுக் கொண்டிருக்கும்போது தண்ணீர் தேவைப்பட்டால் வலது கையில் உணவு இருப்பதினால் அதோடு அந்த பாத்திரத்தை தொடுவதால் உணவுப்பருக்கைகள் அதில் ஒட்டிக் கொள்ளும் என்றெண்ணி, இடது கையால் குடிக்கின்றனர். இது முற்றிலும் தவறாகும். எல்லா சந்தர்ப்பங்களிலும் நபிகளாரின் வார்த்தைக்கு முக்கியத்துவம் அளித்து அதை பின்பற்றுவதில் தான், நமக்கு வெற்றி இருக்கின்றது என்ற சிந்தனையை நாம் மனதில் வைத்துக் கொள்ள வேண்டும். அதே சமயம் ஏதேனும் ஒரு வேலையை வலது கையால் செய்து கொண்டிருக்கும் போது மற்றொரு பொருளை எடுப்பதற்காக இடது கையை பயன்படுத்துவதில் தவறு ஏதுமில்லை.

شرح رياض الصالحين ابن عثيمين

நபியவர்கள் கூறினார்கள்: “உங்களில் ஒருவர் சாப்பிட்டால், அல்லாஹ்வின் பெயரை கூறிக் கொள்ளட்டும். அவர் ஆரம்பத்தில் அதை கூற மறந்து விட்டால், “பிஸ்மில்லாஹி அவ்வலஹூ வ ஆகிரஹூ” “இதன் ஆரம்பத்திலும் இறுதியிலும் அல்லாஹ்வின் பெயரைக் கொண்டு ஆரம்பிக்கிறேன்” என்று கூறிக் கொள்ளவும்.
அறிவிப்பாளர் : ஜாபிர் இப்னு அப்துல்லாஹ் (ரலி)

அறிவிப்பாளர் : ஆயிஷா (ரலி)

இந்த அறிவிப்பில் ஒருவர் உண்ண ஆரம்பிக்கும் போது அல்லாஹ்வின் பெயரைக் கூறி ஆரம்பிக்க வேண்டும். அவ்வாறு ஆரம்பத்தில் கூறவில்லை எனில், ஞாபகம் வந்தவுடன் ( بسم الله أوله وأخره ) அதை ஓதிக்கொள்ள வேண்டும். அல்லாஹ்வின் பெயரைக் கூறாமல் சாப்பிடுவதனால் நமது உணவில் ஷைத்தானும் சேர்ந்து சாப்பிடுகிறான். இடையில் ( بسم الله أوله وأخره )  என்று கூறினால் நம்மோடு உணவை சாப்பிட்ட ஷைத்தான் வாந்தி எடுத்து விடுகிறான் என்றும் வந்துள்ளது. உணவு என்பது நூற்றுக்கணக்கானவர்களின் உழைப்பிற்கு பிறகே நம்மை வந்தடைகின்றது என்பது தெளிவானதாகும். அதை இலகுவான முறையில் நமக்கு அளித்த அல்லாஹ்வை நாம்  நன்றி செலுத்துவது மிகவும் முக்கியமான ஒன்றாகும். அல்லாஹ்வின் நினைவின்றி உண்ணும் போது நம்மிடமிருந்து அபிவிருத்தி எடுக்கப்பட்டு விடுகிறது என்பதும் தெளிவான விஷயமாகும்.

شرح رياض الصالحين ابن عثيمين ٤/١٩٨

0
Would love your thoughts, please comment.x
()
x