நபிமொழி விளக்கத்தின் அவசியம்
நாம் ஒவ்வொரு நாளும் பள்ளிகளில் நபிமொழிகளை படிப்பது அல்லது கேட்பது வழக்கம். அத்துடன் அதன் விளக்கம் மற்றும் அதிலிருந்து பெறக்கூடிய படிப்பினைகளைப் பற்றியும் அறிந்துக் கொண்டால் மிகவும் பயனுள்ளதாகும் என்று யோசித்து , “ஹதீஸ்” என்ற தலைப்பில் எழுத முடிவு செய்தேன் அல்ஹம்துலில்லாஹ் .
எனவே, சில ஹதீஸின் சுருக்கமான விளக்கங்களை வழங்குவதன் மூலம், முதலில் நானும், பின்னர் மற்றவர்களும் அதன் பொருளைப் புரிந்துகொண்டு, அதன்படி வாழ முடியும் என்று நம்புகிறேன்.
.
மேலும் இதில் கூறப்படும் விளக்கங்களை அறிஞர்களின் நூல்களில் இருந்து எடுத்து அந்த நூல்களின் பெயர்களையும் குறிப்பிட்டுள்ளேன்
.
இதற்கு இரண்டு காரணங்கள் .
1 இதில் இடம் பெறும் அனைத்தும் இஸ்லாமிய மார்க்கம் சார்ந்தவைகள் இதில் நமது சுயகருத்துக்களோ, முறையாக மார்க்கக் கல்வியை அறியாதர்களின் கருத்துக்களோ இடம்பெற்றுவிடக்கூடாது.
2 இதை பார்வையிடும் அறிஞர்கள் ஏதேனும் தவறுகளைக் கண்டு சுட்டிக் காண்பிக்கும் சமயம் அதைத் திருத்தம் செய்ய எனக்கு இலகுவாக இருக்கும்.
உயர்ந்தோன் அல்லாஹ், நம்மை தடுத்த பாவங்களை விட்டும் முழுமையாக விலகிருப்பதற்கும் அவனது நெருக்கத்தை அடைவதற்கும் உதவி செய்வானாக!
இந்த முயற்சியில் உங்கள் அனைவரின் ஒத்துழைப்பையும் துஆவையும் எதிர்பார்க்கிறேன்.