அந்த தலைப்புகளில் முதன்மையானது “குர்ஆன் விளக்கம்”.
குர்ஆன் விளக்கத்தின் அவசியம்:
நம்மில் பலர் குர்ஆன் ஓதுவது வழக்கம். அதன் தமிழ் மொழிபெயர்ப்பையும் சில சமயங்களில் வாசிப்போம். அல்ஹம்துலில்லாஹ்! அத்துடன் அதன் சுருக்கமான விளக்கங்களை இதில் குறிப்பிட்டால் எனக்கும், மற்றவர்களுக்கும் மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என்று நான் எண்ணினேன் எனவே, குர்ஆனின் சில அத்தியாயங்களுக்கு அறிஞர்களின் சுருக்கமான விளக்கங்களை வழங்குவதன் மூலம், முதலில் எனக்கும் , பின்னர் மற்றவர்களுக்கும் பயனுள்ளதாக அமையும் என்று நம்புகிறேன்.
மேலும் இதில் கூறப்படும் விளக்கங்களை அறிஞர்களின் நூல்களில் இருந்து எடுத்து அந்த நூல்களின் பெயர்களையும் குறிப்பிட்டுள்ளேன்
.
இதற்கு இரண்டு காரணங்கள் .
1 இதில் இடம் பெறும் அனைத்தும் இஸ்லாமிய மார்க்கம் சார்ந்தவைகள் இதில் நமது சுயகருத்துக்களோ, முறையாக மார்க்கக் கல்வியை அறியாதர்களின் கருத்துக்களோ இடம்பெற்றுவிடக்கூடாது.
2 இதை பார்வையிடும் அறிர்கள் ஏதேனும் தவறுகளைக் கண்டு சுட்டிக் காண்பிக்கும் சமயம் அதைத் திருத்தம் செய்ய எனக்கு இலகுவாக இருக்கும்.
எனது இந்த முயற்சியில் தாங்கள் அனைவரும் எனக்கு ஒத்துழைப்பு அளிக்குமாரு கேட்டுக் கொள்கிறேன். எனது இந்த சிறிய முயற்சியை ஏற்றுக்கொள்ள வேண்டுமென்று அல்லாஹ்விடம் ஆதரவைக்கிறேன்.