كُنَّا نَغْزُو مَعَ رَسُولِ اللهِ صلّى الله عليه وسلّم، فَنُصِيبُ مِنْ آنِيَةِ الْمُشْرِكِينَ وَأَسْقِيَتِهِمْ، فَنَسْتَمْتِعُ بِهَا، فَلاَ يَعِيبُ ذَلِكَ عَلَيْهِمْ.

நாங்கள் நபி அவர்களோடு போருக்கு சென்றோம் அச்சமயம் இணை வைப்பவர்களின் பாத்திரங்களையும் தோல்பைகளையும் நாங்கள் எடுத்து பயன்படுத்தினோம். அதற்காக எங்களை எவ்வித குறையும் கூறவில்லை.

அறிவிப்பாளர்: ஜாபிர்(ரலி) 

நூல்:மஆலிமுஸ் ஸுன்னதிந் நபவிய்யா ஹதீஸ் 2665


இந்த அறிவிப்பில் சஹாபாக்கள் நபி(ஸல்) அவர்களோடு சென்று இணைவைப்பாளர்களை எதிர்த்து போரிட்டதில் வெற்றி பொருட்களாக அவர்களின் பாத்திரங்களும், தோல் பைகளும், கிடைத்தன. அவைகளை தங்களுடைய உணவையும் குடிபானங்களையும் வைப்பதற்கு பயன்படுத்தினார்கள். அந்நியர்களின் பாத்திரங்களை பயன்படுத்தியதற்காக எங்களை எவரும் குறை கூறவில்லை. இதன் மூலம் பொதுவாக இணைப்பாளர்களின் பாத்திரங்களை பொதுவாக கழுகாமல் பயன்படுத்தலாம் என்று தெரிகிறது. எனினும் மற்ற சில அறிவிப்புகளில் சற்று விளக்கமாக வந்துள்ளது.  அதாவது வேறு பாத்திரங்கள் இருந்தால் அதையே பயன்படுத்திக் கொள்ளுங்கள். மாற்று மத்தத்தவர்களின் பாத்திரங்களை பயன்படுத்த வேண்டாம்.  வேறு பாத்திரங்கள் ஏதும் கிடைக்கவில்லை (மாற்று மதத்தவர்களின் பாத்திரங்கள் மட்டுமே இருக்கின்றது) என்றால் அவைகளை கழுகி பயன்படுத்துங்கள் என்று வந்துள்ளது. எனவே இணைவைப்பாளர்கள், மற்றும்  நிராகரிப்பவர்களின் பாத்திரங்களை பயன்படுத்த வேண்டிய  நிலை ஏற்பட்டால் அதை கழுவிக்கொண்டு பயன்படுத்த வேண்டும்.

https://dorar.net/hadith/sharh/28570

0
Would love your thoughts, please comment.x
()
x