இந்த அத்தியாயத்தின் பெயர் நம்பிக்கையாளர்கள் என்பதாகும்.

இந்த அத்தியாயம் பற்றி வந்துள்ள நபிமொழி:

அப்துல்லாஹ் இப்னு அஸ்ஸாயிப் (ரலி) கூறுகிறார்கள். நபிகளார் (ஸல்) மக்காவில் இருந்த சமயம் அதிகாலை தொழுகையில் இந்த சூராவின் அத்தியாயத்தின் ஆரம்பத்தில் இருந்து மூஸா (அலை) இன்னும் ஹாரூன் (அலை) அவர்களின் சம்பவங்கள் பற்றி ஓதினார்கள் அப்போது நபிகளாருக்கு கனைப்பு ஏற்பட்டது. உடனே ருகூவு செய்தார்கள்.

இந்த அத்தியாயம் இறங்கிய காலம் பற்றி :

இந்த அத்தியாயம் மக்காவில் அருளப்பட்டதாக எல்லா அறிஞர்களும் கூறுகிறார்கள்.

இந்த அத்தியாயத்தில் அல்லாஹ் நிரூபிக்கும் விஷயங்கள்.

1  ஏகத்துவ கொள்கையை உறுதிப்படுத்துவதும், இணைவைப்பை முறியடிப்பதும்.

2 நபிகளாரின் தூதுத்துவத்தை பறைசாற்றியும், அதை மறுப்போருக்கு பதில் அளிப்பதும்.

 3 இஸ்லாமியர்களிடம் இருக்க வேண்டிய உன்னத பண்புகள்.

இந்த அத்தியாயம் அமைந்திருக்கும் முறைகள்.

1 முதலாவது நம்பிக்கையாளர்களிடம் இருக்க வேண்டிய பண்புகளும் அவர்களுக்கு அல்லாஹ் கொடுக்கும் பரிசு பற்றியதும்.

2 மனிதனை பல கட்டங்களில் படைத்திருப்பதன் மூலம் அல்லாஹ்வின் ஏகத்துவ கொள்கையையும், மரித்த பின் மீண்டும் எழுப்பப்படுவதையும்  பற்றியதும்.

3 இப்பிரபஞ்சத்தில் அல்லாஹ்வின் சில ஆற்றல்களைப் பற்றிய விளக்கம்.

 4 நபிமார்களின் சரித்திரங்களும் அவர்களை எதிர்த்து நின்ற அச்சமுதாயத்தவர்களின் இறுதி முடிவுகளும்.

  5  எல்லா தூதர்களும் நல்லதையே உண்ண வேண்டும். நற்கருமங்களை கடைபிடிக்க வேண்டும் என்றும், தூதுவர்கள் அனைவரும் இதே வழிமுறையிலே இருந்தார்கள் என்பதை பற்றிய விளக்கம்.

6 பல தெய்வ வழிபாடுகளை வணங்கி வரும் இணைப்பாளர்களை, இஸ்லாத்தின் பக்கம் அழைப்பதும், அவர்களுக்கு ஏற்பட்ட சந்தேகங்களுக்கு மறுப்பும், மறுமையில் அவர்களின் நிலை பற்றியும், நபிகளாருக்கு ஆறுதலும் கூறப்படுகிறது.

7 மனிதனுக்கு பார்வை, செவி, உள்ளங்களை படைத்தது அல்லாஹ் தான், என்பதை ஏற்க வைத்து, இவைகளைப் படைக்கும் ஆற்றல் பெற்றவன், மரித்த பின் மீண்டும் எழுப்புவதற்கும் ஆற்றல் பெற்றவன் என்பதை அவர்களின் மூலமாகவே சொல்ல வைக்கிறான்.

8 இணைவைப்பாளர்களின் இம்சைகளைக் கண்டுக் கொள்ளாமல், பொறுமையை மேற்கொண்டு இருக்கவும் அவர்களோடு அழகிய முறையில் நடந்து கொள்ளவும், ஷைத்தானின் தீங்கிலிருந்து அல்லாஹ்விடம் பாதுகாப்புத் தேடுமாறு நபிக்கு சொல்லப்பட்டுள்ளது.

9   இணைவைப்பாளர்கள் எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் மறுமையின் வேதனைகளின் சிலதையும் அது வரும் சமயத்தில் அம்மக்களின் நிலைமையை பற்றியும் கூறப்பட்டுள்ளது.

10 இறுதியாக நபி அவர்கள், அல்லாஹ்விடம் அருளையும் பாவமன்னிப்பையும் கேட்கும் படி கட்டளையிடப்பட்டுள்ளது.

0
Would love your thoughts, please comment.x
()
x