عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ رضي الله عنه قَالَ: إِنَّ خَيَّاطاً دَعا رَسُولَ اللهِ صلّى الله عليه وسلّم لِطَعَامٍ صَنَعَهُ. قَالَ أَنَسُ بْنُ مَالِكٍ: فَذَهَبْتُ مَعَ رَسُولِ اللهِ صلّى الله عليه وسلّم إِلَى ذلِكَ الطَّعَامِ، فَقَرَّبَ إِلَى رَسُولِ اللهِ صلّى الله عليه وسلّم خُبْزاً وَمَرَقاً، فِيهِ دُبَّاءٌ وَقَدِيدٌ، فَرَأَيْتُ النَّبِيَّ صلّى الله عليه وسلّم يَتَتَبَّعُ الدُّبَاءَ مِنْ حَوَالَيِ الَقَصْعَةِ، قَالَ: فَلَمْ أَزَلْ أُحِبُّ الدُّبَّاءَ مِنْ يَوْمِئِذٍ.
ஒரு தையல்காரர் நபியவர்களுக்காக உணவு தயாரித்து நபி (ஸல்) அவர்களை அழைத்தார் அப்போது நானும் நபி அவர்களோடு அந்த உணவிற்கு சென்றேன் அப்போது அவர் நபி (ஸல்) அவர்களுக்கு ரொட்டியையும் சூப் / குழம்பையும் வைத்தார் அந்த குழம்பில் சுரைக்காயும் உப்பு கண்டமும் இருந்தது நான் நபி (ஸல்) அவர்களை பார்த்த போது அவர்களின் கை பாத்திரத்தில் அங்கும் இங்குமாக சுரைக்காயை தேடுபவர்களாக இருந்தார்கள் அனஸ் (ரலி) அறிவிக்கிறார்கள் அன்றைய தினத்திலிருந்து நான் சுரைக்காயை மிகவும் நேசிப்பவனாகிவிட்டேன்.
அறிவிப்பாளர் : அனஸ் இப்னு மாலிக் (ரலி).
நூல் : மஆலிமுஸ் ஸுன்னதிந் நபவிய்யா
சில அறிவிப்புகளில் நபிகளாரின் அந்த செயலை பார்த்து அன்றைய தினம் எனக்கு வியப்பாக இருந்தது. எனவே அந்த தட்டையில் இருந்த எல்லா சுரைக்காயையும் நபிகளாருக்கு நான் விட்டுக் கொடுத்து விட்டேன் எதையும் நான் சாப்பிடவில்லை அதற்கு பிறகிலிருந்து சுரைக்காயை நான் மிகவும் நேசித்து கொண்டேன் எனது ஒவ்வொரு உணவிலேயும் சுரைக்காயை சேர்த்து உண்டு கொண்டேன்.
இந்த அறிவிப்பின் மூலம் நபியவர்கள் சில உணவுப் பொருட்களான (தேன், தல்பீனா என்ற பாயாசம், அஜ்வா என்ற பேரீத்தம் பழம்,) போன்றவைகளை உண்ணும் படி ஆர்வமூட்டியும் அதேபோல் சில உணவுகளை அவர்கள் நேசித்து உண்டும் வந்துள்ளார்கள். நபிகளாரின் தோழர்களை பொறுத்தவரை இந்த இரண்டு முறைகளிலும் அண்ணாரை பின்பற்றுபவர்களாக இருந்துள்ளார்கள் இந்த அறிவிப்பில் அனஸ் (ரலி) அவர்கள் நபிகளாரோடு உண்ண சென்ற போது நபிகளார் சுரைக்காயை தேடி தேடி எடுத்துண்டார்கள்.
இத மூலம் நபியவர்களின் தோழர்கள் நபி அவர்கள் ஏவாத செயல்களையும் அவர்கள் விரும்பிய ஒரே காரணத்திற்காக தாங்களும் விரும்பி அதை தனது வாழ்வில் கடைபிடித்துள்ளார்கள். அப்படியானால் நபி அவர்கள் ஏவி இருக்கும் எத்தனையோ காரியங்களை நமது வாழ்வில் எடுத்து நடப்பதில் நாம் கவனம் வைக்க வேண்டும் என்பது இதிலிருந்து தெரிய வருகிறது.
إحياء سنة اكل الدباء – راغب السرجاني