فَقَالَ النَّبِيُّ صلّى الله عليه وسلّم: (إِنَّ هذَا قَدْ تَبِعَنَا، فَإِنْ شِئْتَ أَنْ تَأْذَنَ لَهُ فَأْذَنْ لَهُ، وَإِنْ شِئْتَ أَنْ يَرْجِعَ رَجَعَ) . فَقَالَ: لاَ، بَلْ قَدْ أَذِنْتُ

“ இம் மனிதர் நம்மோடு வந்துவிட்டார் நீர் விரும்பினால் அவரும் நம்மோடு உண்ணுவதற்கு அனுமதி தரலாம் இல்லையேல் அவரை அனுப்பி விடலாம் அவர் திரும்பிச் சென்று விடுவார் “ என்றார்கள் அல்லாஹ்வின் தூதரே (ஸல்) அவரும் சேர்ந்து உண்ணட்டும் என்று அனுமதி வழங்கினார்

ஹதீஸ் 2651

அபு மஸ்வூத் (ரலி) கூறுகிறார்கள் ஒரு மனிதர் ஐந்து நபர்களுக்கு உணவு சமைத்து அதில் நபிகளாரையும் அழைத்திருந்தார். அவர்களோடு மற்றொரு மனிதரும் சேர்ந்து கொண்டார். அழைத்திருந்த நபரின் வீட்டை அடைந்த சமயம் நபிகளார் விருந்தோம்பல் செய்பவரிடம் “ இம் மனிதர் நம்மோடு வந்துவிட்டார் நீர் விரும்பினால் அவரும் நம்மோடு உண்ணுவதற்கு அனுமதி தரலாம் இல்லையேல் அவரை அனுப்பி விடலாம் அவர் திரும்பிச் சென்று விடுவார் “ என்றார்கள் அல்லாஹ்வின் தூதரே (ஸல்) அவரும் சேர்ந்து உண்ணட்டும் என்று அனுமதி வழங்கினார்.

இந்த ஹதீஸில் கிடைக்கும் பாடங்கள்

1 விருந்தோம்பல் செய்பவர்கள் குறிப்பிட்ட எண்ணிக்கையை கணக்கில் வைத்து சமைப்பதில் எவ்வித தவறுமில்லை. மதினாவில் பல நபர்கள் வசிப்பதுடன் இந்த தோழர் ஐந்து நபர்களுக்கு மட்டுமே உணவு தயாரித்திருந்தார்.
2 தேவையான அளவு உணவு தயாரிப்பதை குறை சொல்வது தவறாகும் சிலரிடம் வசதி குறைவாக இருக்கலாம் வசதி படைத்தவர்கள் தாராளமாக விருந்தோம்பல் செய்தல் நற்பண்பாகும்.
3 விருந்துக்காக செல்பவர்களை பின் தொடர்ந்து மற்றொருவர் பின் தொடர்வதில் தவறேதுமில்லை. இதே போன்று மற்றொரு சம்பவமும் நபி மொழியில் காணக் கிடைக்கின்றன.
4 அழைப்பில்லாத ஒரு நபர், அழைக்கப்பட்டவருடன் வந்தால் விருந்தோம்பல் செய்பவரிடம் அனுமதி பெற்று அவரை உணவில் அமர்த்த வேண்டும்.
5 விருந்தோம்பல் செய்பவரிடம் யாரேனும் மற்றொரு நபருக்காக அனுமதி வேண்டினால் அவர் அனுமதி வழங்குவதற்கும் மறுப்பதற்கும் விருப்பமுடையவராகும்.
6 விருந்தோம்பல் செய்பவர் அனுமதி வழங்கவில்லை என்றால் வந்திருப்பவர் அதை மனமார ஏற்று உள்ளத்தில் எவ்வித வெறுப்பில்லாமல் திரும்பிச் சென்றுவிட வேண்டும்.இதுவே உயர்வான பண்பாகும்.

7 அவ்வாறே பணியில் ஈடுபட்டிருக்கும் ஒருவரிடம் அனுமதி கேட்கும் சமயம் வெகு தூரத்தில் இருந்து வந்திருக்கும் நபர் அனுமதி கேட்டால் நான் வேலையில் இருக்கிறேன் சென்று விடுங்கள் என்று சொன்னாலும் நாம் அதை குறையாகவோ சிரமமாகவோ எடுத்துக் கொள்ளாமல் திரும்பிச் சென்று விட வேண்டும்.

ஹதீஸ் 2651
ஒரு பாரசீக மனிதர் நபி (ஸல்)அவர்களின் அண்டை வீட்டில் வசித்து இருந்தார் அவர் மிகவும் சுவையாக உணவு சமைப்பவர் ஒருநாள் நபிகளாருக்கு உணவு தயாரித்து அதற்காக நபி அவர்களை அழைத்தார். அப்போது நபிகளார் இவருக்கு அதாவது ஆயிஷா (ரலி) விற்கு இருக்கின்றதா ? என்று வினவினார்கள். அதற்கு அவர் இல்லை என்றார் அப்படியென்றால் வேண்டாம் என்று மறுத்து விட்டார்கள். சென்றவர் இரண்டாவது முறை வந்து மீண்டும் அழைக்க நபிகளார்(ஸல்) இவருக்கு அதாவது ஆயிஷாவிற்கு இருக்கிறதா ? என்று வினவினார்கள். அப்போதும் இல்லை என்றார் அவர். அப்படியென்றால் வேண்டாம் என்று நபிகளார் மறுத்தார்கள். சென்றவர் மூன்றாவது முறை வந்து நபிகளாரை மீண்டும் அழைக்க நபிகளார் அதே வினாவை முன் வைத்தார்கள். இப்போது அந்த நபர் ஆயிஷா (ரலி) விற்கும் அனுமதி வழங்கினார் உடனே இருவரும் எழுந்து உணவு உண்ண சென்றார்கள்.
இந்த அறிவிப்பில் கிடைக்கும் பாடங்கள்

1 விருந்தோம்பல் செய்பவர் தன்னை அழைக்கும் போது தான் செல்வதால் ஏதேனும் தங்கடங்கள் இருந்தால் அந்த விருந்தை மறுப்பதற்கு அனுமதியுள்ளது என்பதை உணர்த்துகின்றது. எனவேதான் நபிகளார் இரண்டு முறை நான் வரவில்லை என்று மறுத்தார்கள்.
2 இதில் நபிகளாரின் அழகிய குடும்ப வாழ்க்கையை உணர்த்துகின்றது தனக்கு விருந்து செய்தவரை தன்னோடு நிறுத்திக் கொள்ளாமல் தனது வாழ்க்கை துணைவியாக இருக்கும் ஆயிஷா (ரலி) அவர்களையும் கவனத்தில் கொண்டு இவர்களுக்கும் உணவு வேண்டுமே என்று அனுமதி கேட்டார்கள்.

3 நபிகளாரின் அண்டை வீட்டார் சுவையான உணவு தயாரிப்பவர் என்பதன் மூலம் சுவையான உணவை உண்பதில் தவறேதுமில்லை என்பது தெரிகிறது. அல்லாஹ் அடியார்களுக்கு தூய்மையான உணவுகளை ஆகுமாக்கிக்கியுள்ளான் அதை தடை செய்வதற்கு யாருக்கும் உரிமை இல்லை தடை செய்வதை பாவமான காரியமாக தனது வேதத்தில் குறிப்பிட்டுள்ளான்.
شرح مسلم

4 நபிகளாரின் பணிவை உணர்த்துகின்றது விருந்தோம்பல் செய்பவர் இரண்டு முறை மறுத்திருந்தும் அதை பொறுப்படுத்தாமல் மூன்றாவது முறையும் அனுமதி கேட்டுள்ளார்கள்.
5 தன்னை யாரேனும் விருந்தோம்பல் தர விரும்பினால் அதில் மற்றவர்களை சேர்த்துக் கொள்வதில் கவனம் வைப்பது சிறப்புமிக்கவர்களின் பண்பாகும்.

كتاب الإفصاح عن معاني الصحاح

ஹதீஸ் 2652

நபி(ஸல்) அவர்கள் எந்த உணவையும் குறைகூறியதில்லை உணவை விரும்பினால் உண்பார்கள் விரும்பவில்லையெனில் உண்ணமாட்டார்கள்.
இந்த அறிவிப்பில் நபிகளாரின் உன்னத பண்பு கூறப்பட்டுள்ளது.

1 நபிகளாரிடம் ஏதேனும் உணவு கொண்டு வரப்பட்டால் அதை விரும்பினால் எடுத்துன்னுவார்கள் அதை விரும்பாத பொழுது வேண்டாம் என்று உண்ண மாட்டார்கள் காரணம் நாம் குறை கூறுவதால் விருந்தோம்பல் செய்பவரின் உள்ளம் புண்படும்.

2 உணவு என்பது அல்லாஹ் நான் வணங்கப்பட்ட உயர்வான அருளாகும் அதே சமயம் அந்த உணவுகளும் குடிபாணங்களும் சுவையாகயிருந்தால் அதை புகழ வேண்டும் இதுவும் நபிகளாரின் வழிமுறையாகும்.
رياض الصالحين ابن عثيمين

0
Would love your thoughts, please comment.x
()
x