عَنْ جَابِرٍ قَالَ: سَمِعْتُ النَّبِيَّ صلّى الله عليه وسلّم يَقُولُ: (إِنَّ الشَّيْطَانَ يَحْضُرُ أَحَدَكُمْ عِنْدَ كُلِّ شَيْءٍ مِنْ شَأْنِهِ، حَتَّى يَحْضُرَهُ عَنْدَ طَعَامِهِ، فَإِذَا سَقَطَتْ مِنْ أَحَدِكُمُ اللَّقْمَةُ؛ فَلْيُمِطْ مَا كَانِ بِهَا مِنْ أَذى، ثُمَّ لْيَأْكُلْهَا، وَلاَ يَدَعْهَا لِلشَّيْطَانِ، فَإِذَا فَرَغَ؛ فَلْيَلْعَقْ أَصَابِعَهُ، فَإِنَّهُ لاَ يَدْرِي فِي أَيِّ طَعَامِهِ تَكُونُ الْبَرَكَةُ)

நபியவர்கள் கூறினார்கள். உங்களில் ஒருவரின் ஒவ்வொரு செயலிலும் ஷைத்தான் சேர்ந்து கொள்கிறான் எந்த அளவுக்கெனில் உங்களுடைய உணவிலும் கூட சேர்ந்து கொள்கிறான். எனவே உங்களில் ஒருவரிடமிருந்து ஒரு பருக்கை கீழே விழுந்து விட்டாள் கூட அதில் இருக்கும் தூசியை அகற்றிக் கொண்ட பிறகு அதை உண்ணுங்கள் அந்த பருக்கையை ஷைத்தானுக்கு விட்டு விட வேண்டாம். எனவே அவர் உணவை உண்டு முடித்து விட்டால் தனது கை விரல்களை சூப்பி கொள்ளட்டும். *உண்மையில்* தனது எந்த உணவில் அல்லாஹ்வின் அருள் இருக்கிறது என்பதை அவர் அறிய மாட்டார்.

மஆலிமுஸ் ஸுன்னதிந் நபவிய்யா               ஹதீஸ் 2646

இந்த அறிவிப்பில் நபி (ஸல்) அவர்கள் தனது சமுதாயத்திற்கு உணவு அல்லாஹ்வின் அருள் என்பதை ஞாபகமூட்டியதோடு அதை கண்ணியம் செய்ய வேண்டும் என்றும் கற்றுக் கொடுத்துள்ளார்கள். அவ்வாறே உணவின் ஒழுக்கங்களை கற்றுக் கொடுப்பது போன்று ஷைத்தானிடமிருந்தும் நாம் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார்கள்.
இந்த அறிவிப்பில் கூறிய கருத்தின் மூலம் அடியானின்  உள்ரங்க, வெளிரங்க வணக்க வழிபாட்டிலும் அவரின் சாதாரண பழக்கவழக்கங்களிலும் கூட ஷைத்தான் குறுக்கிட்டு அவரிடம் பலவிதமான தீய எண்ணங்களை ஏற்படுத்திக் கொண்டே இருக்கின்றான். எனவே அவனது எந்த செயலிலும் *ஷைத்தான்* சேர்ந்துக் கொள்ளக்கூடாது என்பதற்காக அவனை விட்டும் பாதுகாப்பு பெற பல விதங்களில் வலியுறுத்தியுள்ளார்கள்.

 நாம்  உணவு உண்ண ஆரம்பிக்கும் போது ஷைத்தான் நம்மைக் கண்காணிக்கிறான் நாம் அல்லாஹ்வின் பெயரை கூறிவிட்டால் அடுத்து  நமது உணவு கீழே விழுவதை எதிர்பார்க்கிறான் அதையும் நாம் எடுத்து விட்டால் அடுத்தது நமது விரல்களிலும்,  தட்டைகளிலும் உணவு ஒட்டிக் கொண்டிருப்பதை எதிர்பார்க்கிறான் இச்சமயமும் நபிகளாரின் வழிகாட்டலை நாம் கடைபிடித்தால் நம்மை விட்டு அவன் விலகிச் சென்று விடுகிறான். 
இந்த அறிவிப்பில் உணவு உண்ணும் பொழுது ஏதேனும் ஒரு கவளம் கீழே விழுந்து விட்டால் அதை ஷைத்தான் எடுத்துக் கொள்வான் அல்லாஹ்வின் அருள் அந்த உணவிலே கூட இருக்கக்கூடும். எனவே அதை ஷைத்தானுக்கு விட்டு விட வேண்டாம் என்று கூறியுள்ளார்கள்
அவ்வாறே கீழே விழுந்த உணவை அப்படியே எடுத்துக் கொள்ள வேண்டாம் அதில் அழுக்குகளும் தூசிகளும் ஒட்டிக் கொண்டிருக்கும்  அதனால் உடலுக்கு தீங்கை ஏற்படுத்தும் அதை எடுத்து நல்ல முறையில் சுத்தம் செய்து அதை உண்ணும்படி ஏவியுள்ளார்கள். அதே சமயம் கீழே *விழுந்ததை* எடுக்காமல் விட்டு விடுவது பெருமையின் அடையாளமாகும். பெருமை *ஷைத்தானின்* குணமாகும். பணிவு ஒரு முஃமினின் பண்பாகும் அதை எல்லா சந்தர்பங்களிலும் முஃமின்கள் கடைபிடிக்க வேண்டும் என்பதை சுட்டிக் காண்பித்துள்ளார்கள்.
விரல்களை சூப்புதல் அதில் சில சுரப்பிகள் சுரப்பதாக மருத்துவர்கள் விவரிக்கின்றார்கள் அது உணவு இலகுவாக செரிமானம் அடைய உதவுகிறது எனினும் இந்த பயன் கிடைத்தாலும் கிடைக்காவிட்டாலும் நபி (ஸல்) அவர்களின் வழிமுறையாகவும் உள்ளது. எனவே எல்லா சந்தர்ப்பத்திலும் நபியின் வழிமுறைக்கே நாம் முக்கியத்துவத்துவம் கொடுத்து கடைபிடிக்க வேண்டும்.
شرح رياض الصالحين ابن عثيمين

சில மார்க்கம் தெரிந்தவர்களும் பாமர மக்களோடு உண்ணுவதால் அவர்களின் நடைமுறையை கடைபிடித்து விரல்களை சூப்பாமலும், தட்டைகளை வலிக்காமலும் எழுந்து விடுகிறார்கள். இது மாபெரும் பழிப்பிற்குறிய செயலாகவும். மார்க்கத்தை சரியாக விளங்காததின் விளைவாகும். எனவே மார்க்கத்தை விளங்கியவர்கள் எல்லா சந்தர்பங்களிலும் நபிகளாரை பின்பற்றினால் நம்மை பார்த்து மற்றவர்கள் பின்பற்றுவதற்கு ஏதுவாக அமையும்.
شرح رياض الصالحين ابن عثيمين

எனவே இது போன்ற ஒழுக்கங்களை *கடைப்பிடிப்பதில்* கவனமாக இருக்க வேண்டும்.

0
Would love your thoughts, please comment.x
()
x