ثُمَّ اَنْشَاْنَا مِنْۢ بَعْدِهِمْ قُرُوْنًا اٰخَرِيْنَؕ‏ مَا تَسْبِقُ مِنْ اُمَّةٍ اَجَلَهَا وَمَا يَسْتَـاْخِرُوْنَؕ‏

பிறகு அவர்களுக்குப் பின் வேறு பல தலைமுறையினரையும் நாம் உண்டாக்கினோம். எந்த ஒரு சமுதாயமும் அதனுடைய தவணையை முந்தவும் மாட்டாது அவர்கள் பிந்தவுமாட்டார்கள்....

வசனம் 43 – 50

இவர்களுக்குப் பின் அவ்விடத்தில் வேறொரு சமூகத்தை நாம் தோற்று வித்தோம் இவ்வுலகில் நிராகரித்தவர்களுக்கென்று நிர்ணயிக்கப்பட்ட சரியான நேரத்தில் அது (அந்த வேதனை) வந்தே தீரும். அச்சமூகம் அழிக்கப்பட்ட பின் அடுத்தடுத்து வந்த சமூகத்தவர்களுக்கு ஒன்றன்பின் ஒன்றாக தூதுவர்களை நாம் அனுப்பிக் கொண்டே இருந்தோம். ஒவ்வொரு சமூகத்திற்கும் வந்த தூதர்களையும் அச்சமூகத்து மக்கள் ஏற்காமல் பொய் படுத்தியதினால் ஒவ்வொரு சமூகங்களையும் வேறருத்து விட்டோம்.
அழிக்கப்பட்ட ஒவ்வொரு சமூகத்தின் வரலாறுகளையும் பின்வருபவர்களுக்கு பேச்சுப் பொருளாக மாற்றினோம். அழிக்கப்பட்ட சமூகங்கள் தூதுவர்களை ஏற்காததினால் (இத்தைகய) சமூகத்தவர்க்கு (அல்லாஹ்வின் அருள்) வெகுதூரமாகிவிட்டது.. இதற்குப் பிறகு மூசாவையும் அவரது சகோதரர் ஹாருனையும் தூதுத்துவத்தையும் *அத்தாட்சிகளையும்* அருளி, ஃபிர்அவ்னையும் அவனது மந்திரிகளையும் நேர்வழியில் அழைக்க அனுப்பி வைத்தோம். ஆனால், அவர்களோ மமதையினால் ஏற்க மறுத்ததோடு இஸ்ரவேலர்களை தனது அடக்கு முறையால் இம்சித்து வந்தான். மேலும் ஃபிர்அவ்ன், தன் சமூக மக்களைப் பார்த்து இவ்விருவரும் உங்களைப் போன்ற மனிதர்களே!. அவர்களின் சமூகத்தினர் எங்களுக்கு அடிமைகளாயிற்றே!” இப்பேர்பட்ட கேவலமானவர்களின் சொல்லையா நீங்கள் கேட்கப் போகிறீர்கள்! என்று ஏளனமாக பேசினான். இறுதியில் அவனும், அவனை ஏற்றவர்களும் கடலில் தூக்கியெறியப்பட்டு மூழ்கடிக்கப்பட்டனர். அதற்குப் பின் பனீ இஸ்ரவேலர்களை செம்மைப்படுத்த *தவ்ராத்* என்னும் வேதத்தை அருளினான். மேலும் *மர்யமின்* மகன் ஈஸாவையும் அவரது தாயையும் அல்லாஹ்வின் ஆற்றலை மக்களுக்கு பறைசாற்றும் வகையில் அத்தாட்சிகளாக மக்களுக்கு காண்பித்தான். மேலும் அவ்விருவரையும் மிக வளமான உயர்ந்த ஒரு வசிப்பிடத்தில் வாழச் செய்தான். அதில் மதுரமான ஊற்றுத் தண்ணீரும் ஓடிக்கொண்டிருந்தது.
تفسير المحرر

குறிப்புகள்
மூஸா நபி (அலை) அவர்களுக்கு அத்தாட்ச்சிகள் வழங்கப்பட்டது போல் ஹாரூன் நபி (அலை) க்கும் வழங்கப்பட்டிருக்கும். காரணம் மூஸாவையும், ஹாருனையும் (அலை) மை தூதுத்துவத்திலும் அத்தாட்சியிலும் சேர்த்து கூறியிருப்பதால் இவ்விருவருக்கும் அத்தாட்சிகளும் தனித்தனியே வழங்கப்பட்டன. என்பது இதன் மூலம் தெரிய வருகிறது.

تفسير الرازي
பொதுவாக நிராகரிப்பவர்கள் கூறும் வாதங்களுக்கு பதிலை அல்லாஹ் அவர்களின் அசத்திய கொள்கையிலேயே வைத்திருப்பான். எனினும் அவர்கள் அதை சிந்திக்க தவறிவிடுகின்றனர். உதாரணமாக : ஃபிர்அவ்னும் அவன் போன்றவர்களும் தம்மை பின்பற்றுபவர்களிடம், தூதுவர் என்று தம்மை வாதிடுபவர்கள் நம்மை போன்ற ஒரு மனிதராக இருப்பதினால் அவர்கள் பின்பற்றப்பட தகுதியற்றவர்கள் என்று கூறினர். ஆனால் நம்மைப் போன்ற ஒரு மனிதரான (ஃபிர்அவ்ன்) எவ்வாறு இறைவனாக இருக்க முடியும் என்பதை அவர்கள் சிந்திக்க முன்வரவில்லை.
تفسير المحرر
முன் சென்ற சமூகத்தவர்கள் அழிக்கப்பட்டதை போல் * *பிர்அவ்ன்* அவனது கூட்டத்தவர்களும் அழிக்கப்பட்ட செய்தியை சொன்ன பின் அப்படியானால் *இஸ்ரவேலர்களின்* நிலை என்னவானது என்ற கேள்வி எழுகிறது. அதற்கு இவ்வசனத்தில் அழிக்கப்பட்ட பின் இவர்கள் தூதுவர்களை ஏற்று அதன் படி தமது வாழ்வை அமைத்துக் கொள்ள *வேதத்தை* வழங்கினோம். தூதுவர்கள் அந்த *வேதத்தின் மூலம்* மக்களை நெறிப்படுத்தினார்கள் என்ற செய்தி இங்கு உணர்த்தப்படுகிறது.
تفسير المحرر
இவ்விடத்தில் முன் சென்ற சமூகங்களுக்கும் இஸ்ரவேலர்களுக்கிடையில் உள்ள வேற்றுமை கூறப்படுகிறது. மற்ற சமூகத்தவர்களுக்கு வேதம் வழங்கப்படவில்லை. எனினும் ஃபிர்அவ்ன் அழிக்கப்பட்ட பின் இஸ்ரவேலர்களுக்கு வேதம் வழங்கப்பட்டது.

تفسير ابن عاشور

 

2
0
Would love your thoughts, please comment.x
()
x