كَعْبِ بْنِ مَالِكٍ قَالَ كَانَ رَسُولُ اللهِ صلّى الله عليه وسلّم يَأْكُلُ بِثَلاَثِ أَصَابِعَ، وَيَلْعَقُ يَدَهُ قَبْلَ أَنْ يَمْسَحَهَا.
கஃப் இப்னு மாலிக் (ரலி) அறிவிக்கிறார்கள் நபி (ஸல்) அவர்கள் மூன்று விரல்களால் சாப்பிடவும் சாப்பிட்டுவிட்டு விரல்களை துடைப்பதற்கு முன் அதை சூப்பியும் கொள்வார்கள். 2645 معالم السنة النبوية
இந்த அறிவிப்பில் நபி (ஸல்) அவர்களின் உண்ணுவதன் இரண்டு ஒழுக்கங்கள் கூறப்பட்டுள்ளன.
1 மூன்று விரல்களால் சாப்பிடுதல் 2 சாப்பிட்ட பின் விரல்களை சூப்புதல்.
மூன்று விரல்களால் சாப்பிடுதல்.
உணவுகளை எடுத்துண்பதில் மிக சிறந்த முறை நபிகளார் காண்பித்த முறையாகும். அதே நேரத்தில் ஒரு விரலால் அல்லது இரண்டு விரல்களால் உண்ணுவதால், உண்பதில் இனிமையும் திருப்தியும் அடைய முடியாது. அவ்வாறே வயிறு நிறைவதற்கு மிக நீண்ட நேரம் எடுத்துக் கொள்ளும்.
ஐந்து விரல்களால் உண்ணும் போது வயிறு விரைவாக நிறைந்து விட்டாலும், அதிகமான அளவு வாயில் வைத்து மெள்ளுவதற்கும் அவை உணவுக் குழாயில் சென்றடைவதற்கும் சிரமம் ஏற்படும் இதனால் சில போது மூச்சு அடைப்பும் ஏற்பட்டு விடும் என்று மருத்துவர்கள் தெரிவிக்கின்றார்கள்.
زاد المعاد
மூன்று விரல்களால் உண்ணுவதில் சிரமமில்லாத உணவுகளை மூன்று விரல்களால் உண்ணுவது சிறந்ததாகும். ஐந்து விரல்களை பயன்படுத்தி உண்ணுவதும் தவறேதுமில்லை என்று அறிஞர்கள் கூறுகின்றனர்.
அந்த மூன்று விரல்களென்பது பெருவிரல், ஆள்காட்டி விரல், நடுவிரல் ஆகும். அதேபோன்று மூன்று விரல்களை விட குறைவான விரலால் உண்ணுவது பெருமையின் மீது அடையாளமாகவும் அதைவிட அதிகமான விரல்களால் உண்ணுவது உணவின் மீது பேராசையும் காட்டுகிறது என்று அறிவித்துள்ளார்கள்.
சாப்பிட்ட பின் விரல்களை சூப்பதல்
சாப்பிட்ட பின் தனது கைகளை கழுவுவதற்கு அல்லது துடைப்பதற்கு முன்பதாக அதை சூப்புவது உணவில் பரக்கத் உள்ள பகுதி கீழே சென்றுவிடக் கூடாது என்பதற்காக நபி (ஸல்) அவர்கள் இவ்வாறு செய்துள்ளார்கள்.
விரல்களை கடைசியில் மட்டுமே சூப்ப வேண்டும். இடையில் சூப்புவதை தவிர்க்க வேண்டும். இதனால் எச்சில், விரல்களில் ஒட்டுவதால் மற்றவர்களுடன் உண்ணும் போது அறுவருப்பை ஏற்படுத்தும்.