عَنْ أَبِي جُحَيْفَةَ قَالَ قَالَ رَسُولُ اللهِ صلّى الله عليه وسلّم: إِنِّي لاَ آكُلُ مُتَّكِئاً.
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் நான் சாய்ந்த நிலையில் உண்ண மாட்டேன். அறிவிப்பாளர்: அபீ ஜுஹைஃ பா
நபி (ஸல்) அவர்கள் சாய்ந்து உண்ணாததற்கு இதற்கு இரண்டு காரணங்கள் இருக்கலாம்.
1 உள்ளத்தோடு சம்பந்தப்பட்டது அதாவது இந்த நிலையில் ஒருவர் உண்பதினால் அவருக்கு பெருமை உண்டாகிவிடும். 2 சாய்ந்து கொண்டு சாப்பிடுவதால் அவர் நிம்மதியாக தாராளமாக இருப்பதினால் தேவையை விட அதிகமாக உண்ணுவதற்கு வாய்ப்பு ஏற்பட்டு விடும். இதனால் உடலுக்கு இடையூறை ஏற்படுத்தும். நபி (ஸல்) அவர்கள் உண்ணும் பழக்கத்தை பற்றி சில அறிவிப்புகளில் இரு கால்களில் குந்தியவாறு உண்ணுவார்கள் என்றும் வந்துள்ளது. இந்த முறையில் உண்ணுவதினால் நிம்மதியாக அமரும் வாய்ப்பு எடுபட்டு விடுகிறது. இதனால் பெரும்பாலும் உணவை அதிகமாக உட்கொள்வது குறைந்து விடும். எனினும் சிலர் நெருக்கமான நிலையிலும் அதிகம் சாப்பிடுபவர் உள்ளனர். மேலும் சாய்ந்த நிலையில் சாப்பிடுவது நபி (ஸல்) அவர்களின் வழிமுறைக்கு மாற்றமானது இது அல்லாத மற்ற முறைகளில் அமர்வது ஆகுமானதாகும். என்றாலும் உணவில் அமரும் சமயம் மிகவும் ஆவலோடு நிம்மதியாக அமர்ந்து சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும். நபியவர்களின் அறிவிப்பில் மூன்றில் ஒன்று உணவிற்காகவும் மற்றொன்றை தண்ணீர் குடிப்பதற்கும் மூன்றாவது பகுதியை சுவாசிப்பதற்கும் விட்டு விடும்படி கூறியுள்ளார்கள். இந்த முறையில் நாம் உணவு உண்பதற்கு அல்லாஹ் உதவி செய்வானாக. شرح رياض الصالحين ابن عثيمين
சாய்ந்த நிலையில் உண்பதற்கு மூன்று விதமாக அறிஞர்கள் கூறுகிறார்கள் 1 சம்மனமிட்டு உண்பது. 2 ஒரு பக்கமாக சாய்ந்து உண்பது 3 முதுகு பக்கமாக சாய்ந்து உண்பது.
இவைகளில் விலா புறத்தில் சாய்ந்தவாறு உண்ணுவதால் உடலுக்கு பாதிப்பை ஏற்படுத்தும். இது இயல்பான முறையில் உணவு செல்வதை தடுக்கும். காரணம் இந்த முறையில் அமரும் போது இரைப்பையை அழுத்துகிறது அவ்வாறு அழுத்துவதினால் உணவு அங்கு செல்வதை தடுக்கின்றது. இதனால் உணவு அங்கு சென்றடைவதற்கு தாமதமாகிறது.
மற்ற இரண்டு முறைகளில் உடலுக்கு பாதிப்பு ஏதும் இல்லையென்றாலும் மன்னர்களும் ஆதிக்கம் செலுத்துபவர்களும் இவ்வாறு உண்பதினால் இது பணிவுக்கு மாற்றமாகும். எனவே தான் நபியவர்கள் அவ்வாறு உண்ண மாட்டேன் என்று கூறியிருக்கலாம். மேலும் ஏதேனும் ஒரு முறையில் சாய்ந்து உண்பதினால் அதிகம் உண்பதற்கும் வழிவகுக்கும்.
இதில் சாய்ந்த நிலையில் நான் உண்ண மாட்டேன் என்று சொன்னது ஒழுக்கம் என்ற அடிப்படையில் சொல்லப்பட்டதாகும் எனவே சாய்ந்த நிலையில் ஒருவர் உண்பதினால் எந்த தவறும் இல்லை. ஏனெனில் நபி (ஸல்) அவர்கள் சாய்ந்த நிலையில் உண்ண வேண்டாம் என்று தடை செய்யவில்லை. எனினும் சாயாமல் உண்பது மிகச் சிறந்ததாகும்.
الموقع الرسمي فتاوى الدروس
இமாம் ஷுஅஃபி (ரஹ்) கூறுகிறார்கள்: சாய்ந்த நிலையில் உண்ண மாட்டேன். என்று சொன்ன காரணம் இவ்வாறு உண்பதினால் தொப்பை ஏற்படும் என்றிருக்கலாம். அதேபோன்று தான் நின்ற நிலையில் நீர் பருக வேண்டாம் என்று சொன்னதற்கும் காரணமாகும்.
كتاب نخب الأفكار في تنقيح مباني الأخبار ١٣/٤١٧
ஹதீஸ் 26 44
நபியவர்கள் (ஸல்) ஒருவர் முகங்குப்பற படுத்த நிலையில் சாப்பிடுவதை தடுத்துள்ளார்கள்.
அறிவிப்பாளர்: இப்னு உமர் (ரலி)
இந்த நபி மொழியில் நபி (ஸல்) அவர்கள் சாப்பிடுவதின் ஒழுக்கங்களில் உள்ள ஒரு முறையை அறிவிக்கிறார்கள் நபி அவர்கள் தனது சமுதாயத்திற்கு எல்லா சந்தர்ப்பங்களிலும் ஹராமான காரியங்களையும் ஒழுக்கத்திற்கு மாற்றமான முறையையும் தடுத்துள்ளார்கள் அதில் ஒன்றுதான் ஒரு மனிதன் குப்புற படுத்த நிலையில் உண்ணுவது. உணவு என்பது அல்லாஹ்வின் மாபெரும் அருளாகும் அதை அவர் அல்லாஹ்விற்கு நன்றி செலுத்தியவாறு பணிவோடு அதை உண்ண வேண்டும். மேல் கூறப்பட்ட முறையில் அவர் உண்ணும் பொழுது அந்த உணவை மதிக்காதவராகவும் பெருமையோடு உண்ணுபவர்களின் முறைக்கு ஒப்பாக இருக்கின்றது எனவே இதை நபி (ஸல்) அவர்கள் தடுத்துள்ளார்கள்.
الدرر السنية