حُنَفَآءَ لِلّٰهِ غَيْرَ مُشْرِكِيْنَ بِهٖؕ
அல்லாஹ்வுக்கு இணைவைக்காது, அவன் ஒருவனுக்கே முற்றிலும் தலைசாய்த்து விடுங்கள்.
அபுல் அம்பியா என்று அழைக்கப்படும் நபி இப்ராஹிம் (அலை) அவர்களின் காலம் தொட்டு முற்றிலுமாக சிலை வணக்கம், மக்கா மாநகரில் அகற்றப்பட்டு ஓரிறைக் கொள்கையை வணங்கி வந்தனர். அதேபோல் அதற்குப் பின் வந்த இறை தூதுவர்களும் இறுதி நாளில் ஒரு இறைத்தூதர் இவ்வுலகில் வந்து முழு உலகிலும் பரவி இருக்கும் இணைவைப்பை முற்றாக அகற்றி முழுமையான ஓரிறைக் கொள்கையின் பால் மக்களை அழைப்பார்கள் என்ற முன்னறிவிப்பையும் கூறிச் சென்றனர்.
இந்த முன்னறிவிப்பை அறிந்த பலர், ஏகத்துவத்தின் படி வாழ்ந்து தம்மை வழிநடத்த வரவிருக்கும் அல்லாஹ்வின் தூதர் எப்போது வருவார்கள் என்ற ஏக்கத்தோடு வாழ்ந்து வந்தனர். இவர்கள் இப்ராஹீம் நபியின் ஏகத்துவக் கொள்கையை ஏற்று இறுதித் தூதரைத் தேடி வந்தவர்களுக்கு வரலாற்று ஆசிரியர்கள் ஹனிஃபுகள் என்று பெயர் கூறுகின்றனர். இத்தகையோர் ஏறத்தாழ 25 நபர்கள் இருந்ததாகவும் குறிப்பிடுகின்றனர்.
1 வரகத் இப்னு நவ்ஃபல்
இவர் அன்னை கதீஜாவின் தந்தையின் சகோதரனின் மகனாவார். இவர் முந்தய வேதங்களைக் கற்று அறிந்து ஆய்வு செய்து பின்னர் ஏகத்துவக் கொள்கை கிருத்துவ மதத்தில் இருப்பதாக எண்ணி அதை ஏற்றிருந்தார். தனது வயோதிக காலத்தில் நபி (ஸல்) அவர்களைப் பற்றி அறிந்து உண்மையான இறைத்தூதர் தான் என்று உறுதி கொண்டு, ஓரிறைக் கொள்கையை ஏற்றதினால், இவரை முஸ்லிம் என்று வரலாற்று ஆசிரியர்கள் கூறுகின்றனர். இதற்குச் சான்றாக நபிகளார் இவரை கனவில் கண்டதாகவும் அதில் வெண்ணிற ஆடையைப் போர்த்தியிருந்ததாகவும் கூறினார்கள்.
2 உதுமான் இப்னு ஹுவைரித்
இவரும் குறைஷிக் குலத்தில் பிறந்தவர். வரக்காவின் தந்தையின் சகோதரனின் மகனாவார். இவர் வரக்காவை விட சற்று திறமையானவராகவும், புரட்சியாளராகவும் கருதப்பட்டார். ஓரிறைக் கொள்கைக்கு எதிராக சிலைவணக்கம் புரிபவர்களை தனது ஆளுமை பலத்தால் வெல்ல வேண்டும் என்ற எண்ணம் கொண்டு பைசாந்திய ஆட்சியாளரின் உதவியை நாடி சென்றார். எம்மை மக்காவின் ஆளுநராக ஏற்படுத்தினால் எனது ஆளுமையால் அவர்களை ஓரிறைக் கொள்கைக்கு அழைத்து இந்த நாட்டுடன் ஆன வணிகத் தொடர்பை வலுப்படுத்துவேன் என்றும் கூறினார். இதனை கேட்ட பைசாந்திய மன்னர் அரபு தீபகற்பத்தின் இதயமாக விளங்கும் மக்காவை தமது ஆட்சிக்கு உட்பட்ட பகுதியாக்கிக் கொண்டால், நினைத்ததை சாதிக்கலாம் என்று எண்ணினான். வந்த உதுமானிடம், இவருக்கு மக்கள் கட்டுப்பட வேண்டும் என்று எழுத்தோலை கொடுத்து அனுப்பினார். தமக்கு கிடைத்த பொறுப்பை தனது சமூகத்திடம் எடுத்துரைத்த போது தனக்கு அனைவரும் கட்டுப்பட்டு ஓரிறைக் கொள்கையை நிலைநாட்ட வேண்டும் என்றும் இணங்காவிட்டால் பைசாந்தியர்கள் போர் தொடுப்பார்கள் என்றும் விவரித்தார். இதனை செவியுற்ற மக்கத்து மக்கள் எதிர்த்தனர். பின் நாட்களில் பைசாந்தியாவுக்கு சென்ற மக்கத்து வணிகர் சிலரை சிறை பிடித்து வைத்திருந்தனர் பைசாந்தியர்கள். அதில் ஒருவர் இறந்துவிட்டார் மற்றொருவரை அழைத்து வருவதற்காக வலீது இப்னு முஙீரா சென்று, தமது வாதத்திறமையால் பைசாந்திய மன்னர்களோடு இனக்கத்தை ஏற்படுத்தினார். பின்னர் பைசாந்தியர்களே உத்மானுக்கு நஞ்சூட்டி கொன்று விட்டனர்.
3 உபைதில்லாஹ் இப்னு ஜஹ்ஷ்
இவரும் குறைஷி குலத்தைச் சார்ந்தவர். இறைத்தூதர் இப்ராஹிம் (அலை) அவர்களின் தூய மார்க்கத்தை தேடி அண்டை நாடுகளுக்கு இவரும் பயணம் செய்திருந்தார். பின் நாட்களில் நமது நபிகளாரின் மார்க்கத்தை அறிந்து மக்கா வந்து இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டார். அபூ சுஃப்யானின் மகளான உம்மு ஹபீபாவை மணமுடித்தார். ஆரம்ப காலத்தில் முஸ்லிம்களுக்கு ஏற்பட்ட கொடுமைகளை தாங்க முடியாமல் ஹபஷா நாட்டிற்கு தஞ்சம் அடைந்தார். ஹபஷாவிற்கு வந்து கிறிஸ்தவர்களால் கவரப்பட்டு தனது இஸ்லாமிய மார்க்கத்தை விட்டும் வெளியேறினார். இதனால் விதவையான அவரின் மனைவி உம்மு ஹபீபாவை நபிகளார் மணந்து கொண்டார்கள்.
இவ்வாறாக சத்தியத்தை தேடியவர்கள் பலர் இருப்பதும் குறிப்பிடத்தக்கது.
4 ஜைய்து இப்னு அம்ரு இப்னு நுஃபைல் .
இவர் உமர் இப்னு கத்தாப் ரலி அவர்களின் சிற்றப்பனின் மகனாவார். இவர் சிலை வணக்கத்தை மிகவும் எதிர்ப்பவராகவும் அதன் மீது வெறுப்பை வெளிப்படுத்துபவராகவும் திகழ்ந்தார். மேலும் நபிகளாரின் நண்பராகவும் இருந்துள்ளார். மக்காவில் நடந்த பெண் பிள்ளை புதைக்கும் கொடுமையை எதிர்த்து அந்த குழந்தைகளை தத்தெடுத்து வளர்த்து வந்தார். இவர் ஓரிறைக் கொள்கையை ஏற்று அதன்படி வாழ்பவர்களை தேடிக்கொண்டிருந்தார் இதனால் அண்டை நாட்டிற்கும் சென்று அவர்களிடம் ஏகத்துவ கொள்கையை பற்றி பலரிடம் விவாதித்தும் வந்தார் சிரியாவிற்கு சென்றது இவரைப் பற்றி அறிந்த சிலர் நீர்த் தேடிக் கொண்டிருக்கும் அந்த ஏகத்துவ கொள்கையின் பால் ஒரு தூதுவர் உமது ஊரிலேயே அனுப்பப்பட உள்ளார். அந்த காலம் மிகவும் நெருங்கி விட்டது என்றும் கூறினார் இதனை கேட்டவுடன் அல்லாஹ்விடம் நான் இஸ்லாத்திலேயே இருப்பதாக சாட்சி கூறுகிறேன் என்று கூறினார் அந்த ஓரிறைக் கொள்கையை எடுத்துரைக்க வரும் தூதுவரைக் காண வேண்டும் என்ற மகிழ்ச்சியோடு மக்காவை நோக்கி பயணப்பட்டார். அந்தோ பரிதாபம்! வரும் வழியிலேயே அவர் சில கொல்லையர்களால் கொலை செய்யப்பட்டார்.
5 உமையா இப்னு அபிஸ் ஸல்த்
இவர் இயற்கையிலேயே கவிதை திறன் மிக்கவர். ஓரிறைக் கொள்கை சம்பந்தமாக பல நூறு கவிதைகளை பாடியுள்ளார். இவர் யூத கிறிஸ்தவ வேதங்களை கற்று இருந்தாலும், அம் மதங்களை தரழுவவில்லை இவர் ஓரிறைக் கொள்கையை ஏற்று இருந்தாலும் அதற்குப்பின் எந்த ஒரு மார்க்கமும் இல்லை என்றும் இறுதி தூதர் அனுப்பப்பட்டாலும் அது தானாக இருக்க வேண்டுமே என்ற பேராவல் கொண்டிருந்தார். இதனால் நபிகளார் தூதராக அனுப்பப்பட்ட செய்தி அவரை எட்டிய பொழுது அவரும் நபிகளாரை எதிர்த்து வந்தார். எனவே தான் இவரின் கவிதைகளை நபிகளாரின் முன் பாடப்பட்ட போது அவைகளை செவிமடுத்து கேட்டார்கள். மேலும் இன்னும் பாட ஆர்வமூட்டினார்கள். இறுதியாக இவர் இஸ்லாத்தின்பால் நெருங்கி விட்டார் என்று கூறி முடித்தார்கள்.
6 லபீத் இப்னு ரபீஆ ஆமிரீ
இவர் அறியாமை காலத்து கவிஞர்களில் ஒருவராக கருதப்படுகிறார் உலக புகழ் பெற்ற முஅல்லக்காத் என்றழைக்கப்படும் ஏழு கவிதை தொகுப்புகளை கோர்வை செய்தவர்களில் இவரும் ஒருவராகும். இவரின் கவிதைகளிலும் ஏகத்துவ கொள்கையை பறைசாற்றும் விதமாக அமைந்திருக்கும். சில வரலாற்று ஆசிரியர்களின் கருத்துப்படி இவர் இஸ்லாத்தை ஏற்றதாகவும் உதுமான் (ரலி) அவர்களின் ஆட்சி காலத்தில் தமது 150 வது வயதில் இறந்ததாக குறிப்பிடுகின்றனர்.
7 அபு கைஸ் இப்னுஸ் ஸல்த்
இவர் மதினாவில் அவ்ஸ் என்னும் கோத்திரத்தைச் சார்ந்தவர் திறமையான கவிஞராகவும் இவர் யூத கிறிஸ்தவ மதங்களை பற்றிய நன்கு அறிந்து வைத்திருந்தவ.ர் இவரின் கவிதைகளில் ஏகத்துவ கொள்கையை பறைசாற்றும் விதமாக பல அமைந்திருக்கும். மற்ற மதத்தவர்கள் தமது மதத்தை ஏற்றுக் கொள்ளும்படி கூறிய சமயம் அவைகளை மறுத்துவிட்டார். பின் நாட்களில் தான் தேடிக் கொண்டிருக்கும் ஏகத்துவ மார்க்கம் தமது பகுதியில் நிலைநாட்டப்படும் என்று கேள்விப்பட்டு ஊர் திரும்பினார். பின்னர் மக்காவிற்கு உம்ரா செய்யும் நாட்டத்தில் சென்று நபிகளாரை சந்தித்து அவர்களின் உபதேசத்தை கேட்டு ஊர் திரும்பியவர் தனது நண்பன் அப்துல்லா இப்னு உபை இப்னு சலூன் என்பவனை சந்தித்தார். அவன் தனது ஊரில் தமது கோத்திரத்தாரை எதிர்த்து வரும் கஜ்ரஜ் உடன் அடுத்த வருடம் போர் நடைபெறும். அப்போருக்குப் பின் இஸ்லாத்தை ஏற்றுக் கொள்ளும் என்று தள்ளிப் போட வைத்தார் அந்தோ பரிதாபம்! 10 மாதங்களிலேயே இவர் இவ்வுலகை விட்டு பிரிந்து விட்டார்.
8 அம்ர் இப்னு அபஸா
இவரும் பல கடவுள் கொள்கையை எதிர்த்து வல்லமை மிக்க ஒருவனே வணங்க தகுதியானவன் என்று வணங்கி வந்தவர். இவர் தமது கொள்கையை மக்களின் முன் எடுத்துரைத்த போது மக்கள் இதே கொள்கையுடைய ஒருவர் மக்காவில் தன்னை நபி என்று கூறி வருகிறார் என்றனர். இதை அறிந்த அம்ரு, உடனை மக்காவிற்கு விரைந்து விசாரித்தார். அப்போது நபி அவர்களை சந்தித்து வணக்க வழிபாடுகளைப் பற்றிக் கேட்டுக்கொண்டார்.
நபி (ஸல்) வரலாறு – அதிரை அஹ்மத்
இதே சிந்தனையில் நபிகளாரின் வருகைக்கு முன்பே பலரும் இஸ்லாமிய சிந்தனையில் வாழ்ந்து வந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.