உணவின் 3 முக்கிய ஒழுக்கங்கள்
உமர் இப்னு அபி சலமா (ரலி) கூறுகிறார்கள். நான் சிறுவயதில் நபிகளாரின் (ஸல்) வீட்டில் இருந்தேன். உண்ணும் போது எனது கை உணவுதட்டில் அங்குமிங்கும் அலைந்துக்கொண்டு இருந்தது. அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் என்னை அழைத்து சிறுவரே! அல்லாஹ்வின் பெயரைக் கூறி உண்ணும். உமது வலக்கரத்தால் உண்ணும். உமக்கு முன்னுள்ளதை உண்ணும் என்று கூறினார்கள். நான் அதற்குப் பின் அதே முறையிலேயே உண்டு வந்தேன். بخاري 5376
இந்த அறிவிப்பில் நபிகளார் (ஸல்) தனது அரவணைப்பில் வளர்ந்த சிறுவர் உமர் இப்னு அபி சலமா (ரலி) விற்கு மூன்று ஒழுக்கங்களை கற்றுக் கொடுத்துள்ளார்கள்.
1 உண்ணும் ஆரம்பத்தில் அல்லாஹ்வின் பெயரைக் கூறி உண்ணுவது.
அல்லாஹ்வின் பெயரைக் கூறி உண்ணுவதை அறிஞர்கள் கட்டாய கடமை என்பதாக கூறுகிறார்கள் ஒருவர் பிஸ்மி கூறாமல் உண்பதினால் பாவமான செயலை செய்ததாக கருதப்படுகிறார் மேலும் சைத்தான் இவரது உணவில் சேர்ந்து கொள்கிறான்.
பிஸ்மியை பிஸ்மில்லா என்றும், முழுமையாகவும் கூறிக் கொள்ளலாம்.
இரண்டாவது ஒழுக்கம் வலது கையால் உண்பது இதையும் அறிஞர்கள் கட்டாய கடமை என்பதாக கூறியுள்ளார்கள் காரணம் மற்ற அறிவிப்புகளில் இடது கரத்தால் உண்பதும், குடிப்பதும் சைத்தானின் வழிமுறை என்றும் வந்துள்ளது எனவே இதுவும் தடுக்கப்பட்ட காரியம் ஆகும் உண்ணும் போது வலது கரத்தில் உணவின் பருக்கைகள் இருப்பதினால் அதோடு பாத்திரத்தில் தொடும் போது பருக்கைகள் ஒட்டிக்கொள்ளும் வாய்ப்பு ஏற்படுகிறது. எனினும் இரு விரலின் ஓரத்தில் எடுத்துக் குடிப்பதினால் கறைகள் குறைவாகவே ஏற்படும் பாத்திரங்கள் அழுக்காவதை எண்ணினால் பெரும் செய்தவராக கருதப்படுவோம்.
எனினும் நிர்பந்தமான சமயங்களில் இடது கையால் உண்பதும் குடிப்பதும் தவறில்லை.
மூன்றாவது ஒழுக்கம்: உனக்கு முன்னுள்ளதை உண்ணவும்
உண்ணும் போது மற்றவர்களுக்கு அருகில் இருக்கும் உணவை எடுத்து உண்பது ஒழுக்கக் குறைவான செயலாகும். அதே சமயம் அந்த தட்டையில் பலவகையான உணவை அங்கும் இங்குமாக பரவி கிடக்கும் போது வேறு ஒருவருக்கருகில் இருக்கும் உணவை எடுத்து உண்பதில் எந்த தவறுமில்லை.
படிப்பினை: பிள்ளைகளின் பொறுப்பாளிகள், பிள்ளைகளுக்கு உணவு குடிப்புகளின் ஒழுக்கங்களைக் கற்றுக் கொடுப்பது அவசியமாகும்.
شرح رياض الصالحين ابن عثيمين ٣/١٧٠