நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் தாயார் ஆமினாவின்  மரணத்திற்குப் பிறகு, நபியின் வளர்ப்பதற்கான பொறுப்பை பாட்டனார் அப்துல் முத்தலிப் ஏற்றுக்கொண்டார்கள்.

காபாவின் நிழலில் அமர்ந்து மக்கத்து சமூக நிர்வாகங்களை நிர்வாகித்து வரும் தலைவர்களுக்குத் தனியாக விரிப்பு ஒன்று போடப்பட்டிருக்கும் அதில் அவர்களைத் தவிர்த்து வேறு யாரும் அமர மாட்டார்கள் ஆனால் அநாதை பேரர் முஹம்மத் தாயை இழந்து வந்ததிலிருந்து தனது அரவணைப்பில் அந்த விரிப்பிலேயே வைத்துக் கொள்வார் அப்துல் முத்தலிப்.
இதனை விரும்பாத மகன்கள் சிலர் முஹம்மதை இழுத்த சமயத்தில் அதைக் கண்டு கோபமுற்றார் மகனே என் பேரரை இங்கிருந்து அகற்றாதே அவருக்கு உன்னதமான ஒரு எதிர்காலமுண்டு என்றும் கூறினார்.

இத்தகைய அன்பான அரவணைப்பிலும் பாசப்பினைப்பிலும் நபிகளாருக்கு இரண்டு ஆண்டுகள் கழிந்தன. நபியவர்கள் எட்டு வயதை எத்திய பொழுது ஒரு நாள் அப்துல் முத்தலிப் தன் மகன்களில் ஒருவரான அப்துல்லாஹ் உடன் ஒரே தாய் வழி சகோதரர் அபூ தாலிபை அழைத்துப் பேரர் முஹம்மதை ஒப்படைத்து விட்டு இவ்வுலகை விட்டுப் பிரிந்தார்  (நபி வரலாறு 87)

நபியவர்கள் (ஸல்) தனது பாட்டலார் அப்துல் முத்தலிப் இறந்தபோது, தனது வாழ்வில் இரண்டாவது முறையாக அனாதை என்ற கசப்பான பாணத்தை பரிகிணார்கள்.

முதல் முறை, அவர்களுக்கு ஆறு வயதாக இருந்தபோது, தனது தந்தையை இழந்த நிலையில் அவரின் பாசம் நேசம் அரவனைப்பை அள்ளிப் பொழிந்து வளர்க்கும் வாய்ப்பே பெற்றிருக்கவில்லை  ஆனால் அப்துல் முத்தலிப், நபியவர்களை தன்னுடைய சொந்த குழந்தையை விடவும் அதிக அன்பயும் அரவணைப்பையும், பாசத்தையும் கொடுத்து, ஒரு தந்தையாக செயல்பட்டதினால் தந்தையின் இழப்பை அனுபவித்த துயரத்தை விடவும் இது மிகுந்த துயரமடைந்திருப்பார்கள் என்பது மிகத் தெளிவானதாகும்.(السيرة النبوية لأبي الحسن الندوي ١٦٣)

அப்துல் முத்தலிபின் பல மனைவிகளில்  ஒரே மனைவிக்கு பிறந்தவர்கள் தான்  அபூ தாலிபும் (நபியின் தந்தையான) அப்துல்லாவுமாகும் . (நபி வரலாறு 87)

0
Would love your thoughts, please comment.x
()
x