நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்கு பல மனைவிகள் இருந்தாலும், அவர்களில் முதலில் மணந்த சிறப்பை கதீஜா (ரலி) அவர்கள் தான் அடைந்தார்கள். (السيرة النبوية لأبي الحسن الندوي ١٧٢ )
கதீஜா (ரலி) அவர்களின் பிள்ளைகள்
நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்கு கதீஜா (ரலி) அவர்களின் மூலம் நான்கு பெண் மக்களும் மூன்று ஆண் மக்களும் நபியின் அடிமையான மாரியா (ரலி) அவர்களின் மூலம் ஒரு மகனும் பிறந்தனர்.
அவர்களின் வரிசைப்படி, காசிம், ஜைனப், ருகைய்யா, ஃபாத்திமா மற்றும் உம்மு குல்சும் ,அப்துல்லாஹ் இவருக்கு தையிப் / தாஹிர் என்றும் கூறுவர் அதற்குப் பின் இப்ராஹீம் என்ற ஆண் பிள்ளை பிறந்தது அவர்களில் பாத்திமாவைத் தவிர்த்து அனைத்து பிள்ளைகளும் நபியின் வாழ்நாளிலேயே இறந்துவிட்டனர். (அர்ரஹீக் 82)