يَٰٓأَيُّهَا ٱلَّذِينَ ءَامَنُواْ لَا تُلۡهِكُمۡ أَمۡوَٰلُكُمۡ وَلَآ أَوۡلَٰدُكُمۡ عَن ذِكۡرِ ٱللَّهِۚ

இறைநம்பிக்கை கொண்டவர்களே! உங்கள் செல்வங்களும், உங்கள் பிள்ளைகளும் அல்லாஹ்வை நினைவு கூர்வதைவிட்டு உங்களை அலட்சியத்தில் ஆழ்த்திவிட வேண்டாம்.

இஸ்லாத்தில் பெரும் பாவங்களில் ஒரு பாவம் தொழுகையை விடுவதாகும் அல்லாஹ் குர்ஆனில் கூறுகிறான் நல்லோர்களுக்குப் பிறகு வந்த சில தீயவர்கள் தொழுகையை விட்டு மனோ இச்சையை பின்பற்றினார்கள் மிக விரைவில் ஙை என்ற நரகிலே நுழைவார்கள் எனினும் அவர்களில் யார் பாவமன்னிப்பு பெற்று நம்பிக்கை கொண்டு நல் அமல்கள் செய்தார்களோ அவர்களை தவிர 19/59,60

இந்த வசனத்தில் தொழுகையை வீணாக்கினார்கள் என்பதற்கு இப்னு அப்பாஸ்(ரலி)  கூறுகையில்  அவர்கள் தொழுகையை முற்றிலுமாக விடவில்லை மாறாக தொழுகையை அதன் ஆரம்ப நேரத்தை விட்டு தாமதமாக  நிறைவேற்றினார்கள் லுஹர் தொழுகையை அஸர் வரையிலும் அஸரை மக்ரிபு வரையிலும் மக்ரிபை இஷா வரையிலும் சுபுஹை சூரியன் உதயமாகும் வரையிலும் பிற்படுத்தி நிறைவேற்றினார்கள் இவ்வாறு யார் தொழுகையை அதன் நேரத்தை தவறி பின்பற்றுகிறார்களோ அவர்கள் நரகத்தில் ஙை என்ற ஆழமான ஒரு ஓடையில் நுழைவிக்கப்படுவார்கள் அதன் வேதனை மிகவும் பயங்கரமானதாக இருக்கும் அந்த ஓடையில் உலகின் மலைகளை எரியப்பட்டால் அவை அதிலுள்ள மிக பயங்கர உஷ்னத்தினால் உருகிவிடுமளவிற்கு நெருப்புக் கொதிக்கும் 

மற்றோர் வசனத்தில் அல்லாஹ் கூறுகிறான் “நம்பிக்கை கொண்டோர்களே உங்களது பொருளும் உங்களது குழந்தைகளும் அல்லாவின் ஞாபகத்தை விட்டும் பாரா முகமாக்கி விட வேண்டாம் யார் அவ்வாறு செய்கிறார்களோ அவர்கள்தான் நஷ்டவாளிகள்” இந்த வசனத்தில் அறிஞர்கள் கூறுகிறார்கள் இதில் அல்லாஹ்வின் ஞாபகம் என்பது ஐந்து நேர தொழுகைகளாகும் இந்த ஐந்து நேர தொழுகைகளை நிறைவேற்றாமல் வியாபாரத்திலும் கொடுக்கல் வாங்கலிலும் உலகை தேடுவதிலும் குடும்பத்தை கவனிப்பதிலும் ஈடுபட்டிருந்ததனால் அவரை நஷ்டவாளியாக கருதப்படும் 

 நபியவர்கள் கூறியதாக இப்னு உமர் (ரலி) கூறினார்கள். “யார் தொழுகைகளை பேணி தொழுகிறாரோ மறுமையில் அந்தத் தொழுகை அவருக்கு மறுமையில்  ஒளியாகவும் ஆதாரமாகவும் வெற்றிக்கு காரணமாகவும் அமையும் அவ்வாறு பேணவில்லையெனில் அது அவருக்கு ஒளியாகவோ ஆதாரமாகவோ வெற்றிக்குக் காரணமாகவோ இருக்காது மேலும் அவர் மறுமை நாளில் காரூர் ஹாமான் உபை இப்னு ஹலப் இவர்களோடு எழுப்பப்படுவார்”. 

இப்னுல் கைய்யிம் (ரஹ்)  கூறுகிறார்கள் “தொழுகையை விட்டவர்களை பின்வரும் நபர்களோடு சேர்த்துக் கூறியதில் ஒரு நுட்பம் உள்ளது ஒருவரின் செல்வம் தொழுகையை நிறைவேற்றுவதற்கு தடையாக இருப்பின் அவர் காரூனோடும் இவரது ஆட்சி தடையாக இருப்பின் அவர் ஃபிர்அவ்னோடும் அவரது பதவி தடையாக இருப்பின் அவர் ஹாமானோடும் வியாபாரம் தடையாக இருப்பின் அவர் உபை இபுனு கலஃபோடும் எழுப்பப்படுவார்கள்”.  ( الكبائر تحقيق – مشهور بن حسن آل سلمان ١٢٥ )

சில அறிஞர்களின் கருத்துப்படி தொழுகையை விடுபவர் இஸ்லாத்தை விட்டும் வெளியேறி விடுவார் என்றும் கூறியுள்ளார்கள் எனவே இந்த ஐந்து நேரத் தொழுகைகளை நாம் முறையாக பேணி நிறைவேற்ற முயற்சிப்போமாக !

உங்களுக்குத் தடை செய்யப்பட்டுள்ள பெரும் பாவங்களைத் தவிர்த்து வந்தீர்களானால் உங்களுடைய சின்னஞ்சிறு தவறுகளை உங்கள் கணக்கிலிருந்து நாம் நீக்கி விடுவோம்; மேலும் உங்களை கண்ணியமான இடத்தில் நுழைய வைப்போம் 4/31

0
Would love your thoughts, please comment.x
()
x