நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்கு ஆறு வயதானபோது தனது கணவரின் மண்ணரையைக் கண்டுவருவதற்காகவும் தான் பெற்றெடுத்த மகிழ்வை பரிமாரிக் கொள்வதற்கும்  குழந்தை முஹம்மதை உறவினர்களிடம் அரிமுகப் படுத்தவும் ஆமினா விரும்பினார். எனவே தனது அன்புக் குழந்தையை அழைத்துக் கொண்டு  ஊழியப் பெண் உம்மு அய்மனுடன்  500 கி.மீ பயணம் மேற்கொண்டு மதினாவை  சென்றடைந்தார். 

சந்தித்துவிட்டு திரும்பி வரும் வழியில், அபுவா என்ற இடத்தில் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் தாயார் மரணித்து விட்டார்.

இது நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் வாழ்வில் ஏற்பட்ட மிகப்பெரும்  துயரமாகும்.(அர்ரஹீக் 78)

நிகழ்வின் தாக்கம்:

தாயின் மரணம் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களை மிகவும் பாதித்தது  அவர்கள் தனது தாயாரை மிகவும் நேசித்தார்கள், அவர்களின் பிரிவு தாங்க முடியாத துயரமாக இருந்தது. 40,50 வருடங்கள் கழிந்த பின்பும் கூட , அந்த வழியாக பயணம் செய்த பொழுது தனது தாய் மரணித்த இடம் ஞாபகத்துக்கு வந்தவுடன் சமாதியை சந்தித்து அழுதார்கள் அவர்களின் அழுகை உடனிருந்தவர்களையும் அழவைத்துவிட்டது.  நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் தாயார் ஆமினாவின் மரணம் நபியின் வாழ்க்கையில் ஒரு துயர நிகழ்வாகும். தனது தாயாரை மிகவும் நேசித்த நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள், அவர்களின் பிரிவை வாழ்நாள் முழுவதும் நினைவில் வைத்திருந்தார்கள். (البداية والنهاية 3/425)

0
Would love your thoughts, please comment.x
()
x