عن أبي هريرة رضي الله عنه : عن النبي صلى الله عليه و سلم قال ( سبعة يظلهم الله تعالى في ظله يوم لا ظل إلا ظله إمام عدل وشاب نشأ في عبادة الله
ورجل قلبه معلق في المساجد ورجلان تحابا في الله اجتمعا عليه وتفرقا عليه ورجل دعته امرأة ذات منصب وجمال فقال إني أخاف الله ورجل تصدق بصدقة فأخفاها حتى لا تعلم شماله ما تنفق يمينه ورجل ذكر الله خاليا ففاضت عيناه ) صحيح البخاري
மறுமையில் நிழல் பெறும் இரண்டாவது வகையினர் யார் என்பதைப் பற்றி இங்குக் கூறப்பிடப்பட்டுள்ளது. அவர்களிடம் இரண்டு முக்கிய குணங்கள் காணப்படுகின்றன:வாலிபம்,
வணக்க வழிபாடு
: வாலிபப் பருவம் எனபது 15 வயது முல் 30 / 40 வயது வரையாகும். இந்த பருவம் மனித வாழ்வில் மிகவும் முக்கிய பங்கு வகிக்கிறது. இந்த பருவத்தில் பல்வேறு பாவசிந்தனைகள், பாவத்தின் தூண்டுதல்கள், உடலில் சூடான ரத்தம் மற்றும் ஒவ்வொரு செயலையும் துணிச்சலுடன் செய்யும் தைரியம் போன்றவை அதிகமாக இருக்கும், இந்தச் சூழ்நிலையில், தனது வாலிப இச்சைகளையும், ஆசைகளையும், தீய எண்ணங்களையும் கட்டுப்படுத்தி, தனது வாழ்வை அல்லாஹ்வின் வணக்கத்தில் கழிப்பது மிக மிக உயர்ந்த செயலாகும்.
வாலிபப் பருவத்தில், இளைஞர்கள் பல்வேறு தவறான வழிகளுக்குத் தூண்டப்படுகின்றனர்.
ஆனால், அல்லாஹ்வின் வணக்கத்தில் ஈடுபடுவதன் மூலம், தவறான வழிகளிலிருந்து தன்னைக் காத்துக்கொண்டு, மறுமையில் நிழல் பெறும்
பாக்கியத்தை அடைந்துக் கொண்டனர்.
அல்லாஹ்வின் வணக்கம் என்பது அவனது கட்டளைகளை எடுத்து நடப்பதும், அவன் தடுத்தவைகளை விட்டு விடுதல் என்பதன் பொருளாகும்.
எனவே, ஒருவர் தனது வாலிபப் பருவத்தை அல்லாஹ்வின் வழியில் செலவிடுவதன் மூலம் மறுமையின் திடுக்கத்திலிருந்து பாதுகாப்புப் பெறுகிறார்.
மறுமையில் நிழல் பெற விரும்புபவர்கள், தங்கள் வாலிபப் பருவத்தை அல்லாஹ்வின் வணக்கத்தில் கழிக்க வேண்டும். இதுவே மிக உயர்ந்த செயலாகும், இதன் மூலம் மறுமையில் நிழல் பெறும் பாக்கியத்தை பெற முடியும். (ஷரஹ் ரியாழுஸ் ஸாலிஹீன்- இப்னு உஸைமீன்-1/462)