நபி (ஸல்)  அவர்களுக்கு இரண்டு வயது ஆனபோது, அவர்களின் செவிலித்தாய் ஹலீமா அவர்கள் நபியவர்களை மக்காவிலிருந்து தனது இருப்பிடமான தாயிஃபிற்கு அருகில் உள்ள பனூ ஸஅத் குடியிருப்பிற்கு அழைத்து வந்த சில  மாதங்களுக்குப் பிறகு நபி(ஸல்) அவர்கள் தன் குழந்தை பருவத்தில் சிறுவர்களுடன் விளையாடிக் கொண்டிருந்த  போது ஜிப்ரயீல் (அலை)  வந்து  குழந்தை முஹம்மதை பிடித்து கிடத்தி நெஞ்சை பிளந்து  இதயத்திலிருந்து ஒரு ரத்தக்கட்டி எடுத்து இது உன்னிலிருந்த ஷைத்தானின் தன்மையாகும் எனக் கூறினார்கள்.  அதன் பின்னர் தங்கத்தட்டொன்றிலிருந்த ஜம்ஜம் நீரால் இதயத்தை கழுவினார் இதை பார்த்துக் கொண்டிருந்த மற்ற சிறார்கள் அன்னை ஹலீமாவிடம் ஓடி வந்து முஹம்மது கொலை செய்யப்பட்டு விட்டார் என்றனர் உடனே அனைவரும் முஹம்மதைச்  சென்று பார்த்தபொழுது அவருடைய நிறம் வெளுத்துப் போய் இருந்தது

அனஸ் (ரலி) கூறுகிறார்கள் பிந்திய நாட்களில் நபியின் நெஞ்சில் தையல் அடையாளத்தை நான் கண்டுள்ளேன்.

அறிஞர்களின் கருத்து:

பெரும்பாலான அறிஞர்கள், நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் உள்ளம் மூன்று முறை கழுகப்பட்டதாக கருதுகின்றனர்.

  • முதன்முறை, குழந்தை பருவத்தில்.
  • இரண்டாவது முறை, நபித்துவம் கிடைப்பதற்கு முன்பு.
  • மூன்றாவது முறை, மி’ராஜ் (வானுலகப் பயணம்) செல்வதற்கு முன்பு.                                                                                      (நபி வரலாறு -அதிரை அஹ்மத் 82)

நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் உள்ளம் கழுகப்பட்ட நிகழ்வு, இஸ்லாமிய வரலாற்றில் ஒரு முக்கிய நிகழ்வாகும். இந்நிகழ்வு, நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் தனித்துவம் மற்றும் அவர்களுக்கு அல்லாஹ் வழங்கிய சிறப்பான  அருள்களை எடுத்துக்காட்டுகிறது

0
Would love your thoughts, please comment.x
()
x