الَّذِيْنَ هُمْ فِىْ صَلَاتِهِمْ خَاشِعُوْنَ ۙ
அவர்கள் எத்தியோர் என்றால் அவர்கள் தங்களுடைய தொழுகைகளில் பயபக்தியோடு நிறைவேற்றுவார்கள்
இந்த வசனத்தில் அந்த வெற்றியாளர்களின் இரண்டாம் தன்மையாக தொழுகையைப் பற்றிக் கூறுகிறான் அவர்கள் தொழுகும் போது உள்ளச்சத்தோடு தொழுவார்கள் உள்ளச்சம் என்பது இரண்டு தன்மைகளில் ஏற்படும்
ஒன்று அவர்கள் தங்களின் தொழுகையில் தீய எண்ணங்களை விட்டும் தீய சிந்தனைகளை விட்டும் உள்ளத்தை கட்டுப்படுத்தி அல்லாஹ்விற்கு முன்னால் நிற்கின்றோம் என்ற சிந்தனையிலும் அல்லாஹ்வின் நெருக்கத்தை அடைந்து கொள்கிறோம் என்ற எண்ணத்திலும் உள்ளத்தை ஓர்மைப்படுத்தி தொழுவார்கள்
இரண்டாவது தங்களுடைய தொழுகையின் ஆரம்பத்திலிருந்து இறுதி வரையிலும் ஓதவேண்டிய குர்ஆன் வசனங்களையும் நிறைவேற்ற வேண்டிய குனிதல், சிரம் பணிதல் போன்ற செயல்கள் அனைத்தையும் அமைதியாக செய்வதோடு தங்களது உடல் உறுப்புகளை அங்கும் இங்கும் அசைக்காமல் நிறைவேற்றுவார்கள் இந்த இரண்டு தன்மைகளில் குறைவு ஏற்பட்டால் தொழுகை ஏற்றுக்கொள்ளப்பட்டாலும் முழுமையான தொழுகைக்கு கிடைக்க வேண்டிய அந்த நன்மை இந்தத் தொழுகையில் குறைந்து விடும் என்பது இந்த வசனத்தின் சுருக்கமாகும் (தஃப்ஸீர் ஸஅதீ )
சுவனம் என்பது கடமையான காரியங்களை ஒருவர் நிறைவேற்றினால் மட்டுமே அதை அடைந்துக் கொள்ள முடியும் மேலதிகமான வணக்கங்களைக் கொண்டு மட்டும் அதை அடைய முடியாது இங்கு கூறப்பட்ட வசனத் தொடர் இறுதியில் இந்த தன்மைகளைப் பெற்ற இவர்கள் மட்டுமே ஃபிர்தவ்ஸ் என்னும் சொர்க்கத்திற்குச் சொந்தக்காரர்கள் என்பதாக கூறப்பட்டுள்ளது இதன் மூலம் மேற்கூறப்பட்ட அனைத்து தன்மைகளும் கடமை என்பதை உணர்த்துகின்றது எனவே நல்லோர்களின் தன்மையாக கூறப்பட்டிருக்கும் தன்மையான தொழுகையில் உள்ளச்சம் என்பதும் கடமை என்பதை விளங்க முடிகின்றது
உமர் அவர்கள் ஒருவரின் தொழுகையில் அவரது அங்கங்கள் அசைவதைக் கண்டு இவர் தொழுகையை உள்ளச்சத்தோடு நிறைவேற்றினால் அவரது அங்கங்கள் அமைதி பெறும் என்ற கருத்தை கூறினார்கள்
(மஜ்மூவுல் ஃபதாவா 22/554)
எனவே தொழுகையை நிறைவேற்றும் போது உள்ளச்சத்தோடு நாம் நிறைவேற்றுவதற்கு அல்லாஹ் உதவி செய்வானாக