பெருமானாரின் வருகை
பெருமானார் (ஸல்) அவர்கள் வருகை குறித்து எல்லா நபிமார்களும் முன் அறிவிப்பு செய்து வந்திருக்கின்றனர். இம்முன் அறிவிப்புகளில் அனேகத்தை யூத, கிறிஸ்தவர்கள் வேறு வகையான வியாக்கியானங்கள் கூறி மறைக்க முயன்ற பொழுதிலும், தவ்ராத், இன்ஜில், ஜபூர், சுஹுபுகள் யாவும் அத்திரு நபியைப் பற்றி விவரமாக குறிப்பிட்டு இருக்கின்றன. இந்து மத வேதங்களும், மகரிஷியின் கையேடுகளும் சகல, மத குருமார்களும் பெருமானார் தோற்றம் குறித்துத் தெரிவித்து வந்துள்ளார்கள்.
உதாரணத்திற்கு சில முன்னறிவிப்புகள்
இந்திய துணை கண்டத்தில் பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன் பரவி விட்டிருந்த இந்து மத புராணங்களும் கூட உலகிற்கு ஒரு மானிட அருட்கொடை வரவிருக்கின்றது என்பதைக் கோடிட்டுக் காட்டினார். ‘வியாசர்’ என்ற சீர்திருத்தவாதியால் கூறப்பட்ட ஸ்லோகம் இதனை மெய்ப்படுத்துகின்றது.
பாலைவனமான இன்னொரு நாட்டில் சீர்திருத்தவாதி ஒருவர் தம் சீடர்களுடன் வருவார் அவர் பெயர் மஹாமத் என்பதாகும் அவர்கள் லிங்கம் முனைத்தோல் அறுப்புச் செய்திருப்பார்கள் தலைமழித்து தாடி வளர்த்திருப்பார் மாமிச உணவு காய்கறிகள் உட்பட அனைத்தையும் உண்பர் தொழுகைக்காக மற்றவர்களை கூவி அழைக்கும் முஸ்லிம்களை அன்னோர்’ என்றார்.
ஹஜரத் இப்ராஹிம் (அலை) அவர்கள் காபாவை கட்டி முடித்ததும் இறைவனிடம் பிரார்த்தித்ததாவது எங்கள் இறைவா! அவர்கள் மத்தியில், அவர்கள் இனத்திலிருந்து ஒரு தூதரை அனுப்புவாயாக! அவர் அவர்களுக்கு உனது வசனங்களை ஓதி காண்பிப்பார். இன்னும் அவர்களுக்கு வேதத்தையும், ஞானத்தையும் கற்பித்து கொடுப்பார். அன்றியும் அவர்களைப் பரிசுத்தமாகவும் ஆக்கி வைப்பார். திட்டமாக நீ மிகைத்தோன் தீட்சண்ய ஞானம் உடையவன். (நபி வரலாறு – அதிரை அஹ்மத் 46)