குர்ஆன் பாடம் 3

கல்வியாளரின் அடையாளம்

اِنَّمَا يَخْشَى اللّٰهَ مِنْ عِبَادِهِ الْعُلَمٰٓؤُا ؕ اِنَّ اللّٰهَ عَزِيْزٌ غَفُوْرٌ‏

நிச்சயமாக அல்லாஹ்வை அவனுடைய அடியார்களில் பயப்படுவதெல்லாம் (அவனைப்பற்றி அறிந்த) கல்விமான்கள் தாம். (அல்குர்ஆன் : 35:28)

إِنَّمَا يَخْشَى اللهَ مِنْ عِبَادِهِ الْعُلَمَاءُ

அல்குர்ஆன் விரிவுரையாளரகள்  கூறுகிறார்கள் : 

அல்லாஹ்வை அதிகம் அறிந்திருப்பவர் தான் அவனை அதிகம் அஞ்சுவார். 

அல்லாஹ்வின் அச்சமானது அவரைப் பாவத்தில் இருந்து தவிர்ந்து நடக்க வைப்பதோடு, 

தான் பயப்படுகின்ற அல்லாஹ்வை (மறுமையில்) சந்திப்பதற்கு (இம்மையில்) தயார் செய்ய வைக்கும்

இது கல்வியின் தனிச்சிறப்பிற்குச் சான்றாக இருக்கின்றது. 

ஏனெனில், கல்வி (எம்மை) இறையச்சத்தின் பக்கம் அழைத்துச் செல்லும்.          (தஃப்ஸீர் ஸஅதீ)

(எனவே ஒருவர் மார்க்க அறிஞர் என்றால் அவரிடம் அல்லாஹ் அச்சமே மேலோங்கி இருக்க வேண்டும்)

0Shares