நபிகளார் 3 பிறப்பு

நபிகளாரின் பிறப்பு

அகிலத்தின் அருட்கொடை, இறைத்தூதர்களின் தலைவர் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மக்காவில் அமைந்துள்ள பனூ ஹாஷிம் பள்ளத்தாக்கில் பிறந்தார்கள்.
அவர்களின் பிறப்பு ரபீவுல் அவ்வல் மாதம் 9/12 ஆம் நாள் திங்கட்கிழமை (கி.பி. 571 ஏப்ரல் மாதம் 20 அல்லது 22ம் தேதி) அதிகாலையில் நிகழ்ந்தது.
பிறப்பு நிகழ்வுகள் பற்றிய கூற்றுகள்:
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் பிறந்தபோது, அவர்களின் தாயார் ஆமினாவின் உடலிலிருந்து ஒரு பேரொளி வெளிப்பட்டது அந்த ஒளியின் பிரகாசம் ஷாமின் கோட்டைகள் வரை பரவியது.  (அர்ரஹீக்)

குழந்தை பிறந்த செய்தியை குடும்பத்துப் பெரியோர்களிடத்தில் கொண்டு போய் சேர்ப்பதில் முந்திக் கொண்டவர் துவைபா என்ற அடிமை பெண்ணாகும் பேரன் பிறந்த செய்தி அறிந்த அப்துல் முத்தலிப் ஆமினா இருந்த வீட்டை நோக்கி விரைந்து வந்தார் பின்னர் துவைபா தான் அடிமையாக பணியாற்றும்  அபூ லஹ்பின் வீட்டிற்கும் விரைந்து எஜமான் அபூ லஹ்பிடமும் நற்செய்தியைக் கூறினார் இந்த அருமை செய்தியால் அகங்குளிர்ந்த அபூலஹப் துவைவாவை அன்று முதல்  அடிமை தளையிலிருந்து விடுவித்து விட்டார் (நபி வரலாறு – அதிரை அஹ்மத் 73-74 ) 

0Shares