ஹதீஸ் பாடம் 8

சொர்க்கவாசிகளின் வயது

முஆத் பின் ஜபல் (ரழி) அவர்கள் கூறியதாவது:  நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

يَدْخُلُ أَهْلُ الْجَنَّةِ الْجَنَّةَ جُرْدًا مُرْدًا مُكَحَّلِينَ أَبْنَاءَ ثَلاَثِينَ أَوْ ثَلاَثٍ وَثَلاَثِينَ سَنَةً  

“சொர்க்கவாசிகள், முப்பது வயது அல்லது முப்பத்து மூன்று வயதினராகவும் ,அவர்களது உடலிலும்  முகத்திலும்  முடி இல்லாமல், கண்களில் குஹ்ல் சுர்மாயிட்டவர்களாக சொர்க்கத்தில் நுழைவார்கள்.”

நூல்: ஸஹீஹ் | ஜாமிஹ்‌ அத் திர்மிதி 2545

ஆண் பெண் ஒவ்வொருவரும் இளமைப் பருவத்தில், தன்னுடைய ஆசைகளை முழுமையாக உணரவும், அவற்றை நிறைவேற்றவும் தேவையான உடல் வலிமையும் உள்ளத்தின் திருப்தியயும் இந்த வயதில் தான் பெறுகின்றனர். ( ஹாதியுல் அர்வாஹ் – 1-318)

جردا مردا என்பது ரோமங்கள் இல்லாமல் மெள்ளிய தோலுக்கு சொல்லப்படும் இந்த தண்மையோடு ஒருவரைக் காணும்போது பாரப்பவரின் கண்கள் வியக்கின்ற அளவு மிக அழகாக காட்சியளிப்பார் (கிதாபு ஜவாஹிர் மின் அக்வாலிர் ரஸூல் 662)

சுவனத்தில் நுழையும் போது, சுவனவாசிகள் அனைவரும் 60 அடி உயரத்துடன், ஒரே மாதிரியான உயர்ந்த குணங்களுடனும், நோய் மற்றும் முதுமை இல்லாமல், என்றென்றும் இளமையுடனும் இருப்பார்கள். ஆதாம் (அலைஹிஸ்ஸலாம்) அவர்களும் அவர்களுடன் இணைவார்.(துரூஸ் ஸாலிஹ் அல் மஃகாமிஸி )

0Shares