குர்ஆன் பாடம் 5

யார் வெற்றியடைந்தவர்கள்

قَدْ اَفْلَحَ الْمُؤْمِنُوْنَۙ‏

திண்ணமாக, இறைநம்பிக்கையாளர்கள் வெற்றி பெற்றுவிட்டனர்.

சுருக்கமான விளக்கம்

   அல்லாஹ்வையும் அவனது தூதரையும் உண்மைப்படுத்தி அல்லாஹ் வகுத்த வழியில் நடப்போர் வெற்றி பெற்றவர்கள். அத்தகைய வெற்றி பெற்றவர்களின் குணங்களை அடுத்து வரும்  வசனங்களில் அல்லாஹ் விளக்குகிறான்.

அந்த குணங்கள் ஒருவரிடம் அதிகமாக காணப்பட்டால் அவர் மகத்தான வெற்றியடைவார் அந்த குணங்கள் ஒருவரிடம் குறைவாக காணப்பட்டால் அவர் குறைவாக வெற்றியடைவார் என்பதே இவ்வசனத்தின் கருத்தாகும்

இந்த வசனத்தில் قد என்ற வார்ததை கூறப்பட்டு இருப்பதால் இது திட்டவட்டத்தை அறிவிக்கும் இதன் மூலம் ஒருவரிடம் உன்மையான நம்பிக்கை இருந்து அதன் படி தனது வாழ்வை அமைத்துக் கொண்டால் நிச்சயமாக அவர் வெற்றி அடைவதில் எவ்வித ஐய்யமும் இல்லை என்பதை இது உணர்த்துகின்றது

 இந்த வசனத்திலும் இதற்குக் கீழுள்ள வசனங்களிலும் வெற்றியாளர்களின் பல தன்மைகளை முதலாவதாக இருக்கும்  இறை நம்பிக்கையாளர் என்ற பணபுக்குத்  துணையாகவே மற்ற பணபுகளைக்  குறிப்பிடப்பட்டுள்ளன இதற்கு காரணம் ஒரு மனிதனிடம் எவ்வளவு உயர்வான நல்ல பண்புகள் இருந்தாலும் அவைகள் அனைத்திற்கும் அடிப்படையானது இறை நம்பிக்கையாகும் மேலும் அந்த உயர்ந்த பண்புகள் ஒரு மனிதனிடம் வெளிப்படுவதற்கு அவனிடம் இறை நம்பிக்கை ஆழமாக இருந்தால் மட்டுமே வெளிப்படும் என்பதை உணர்த்தும் விதமாக இந்த வசனம் வாசகம் அமைந்துள்ளது.  (தஃப்ஸீர் அல் முஹர்ரர்) 

ஈமான் என்பது பல படித்தரங்களைக் கொண்டதாகும் அதில் உயர்ந்தது அல்லாஹ் ஒருவன் மட்டுமே வணக்கத்திற்கு தகுதியானவன் என்ற நம்பிக்கையாகும்  அதில் இறுதித்தரத்தில் உள்ளது வழியில் இருக்கும் இடையூறு தருபவற்றை  அகற்றுவதாகும்

ஈமான் என்பது நன்மைகள் செய்வதன் மூலம் அதிகரிக்கும் என்றும் பாவங்கள் செயவதினால் குறைந்துவிடும் என்றும் அறிஞர்கள் கூறுகியுள்ளார்கள்      (அத்துரருஸ் ஸனிய்யா)

எனவே நாம் இஸ்லாம் கூறும் நற்காரியங்களை அதிகம் செய்து உயர்ந்த பதவியை அடைவோமாக !

0Shares