குர்ஆன் பாடம் 4

யார் அறிவுடையோர்

إِنَّ فِي خَلْقِ السَّمَاوَاتِ وَالأرْضِ وَاخْتِلافِ اللَّيْلِ وَالنَّهَارِ لآيَاتٍ لأولِي الألْبَابِ

நிச்சயமாக, வானங்கள், பூமி ஆகியவற்றின் படைப்பிலும்; இரவும், பகலும் மாறி மாறி வருவதிலும் அறிவுடையோருக்கு திடமாக அத்தாட்சிகள் பல இருக்கின்றன.. [அல் குர்’ஆன் 3:190]

குர்ஆன் பல விசேஷமான சிறப்புகளைக் கொண்ட மக்களைப் பற்றிக்  குறிப்பிடுகிறது.  நாம் அந்த விசேஷமான குழுவைச் சேர்ந்தவராக இருந்தால், நாமும்  அல்லாஹ்வினுடைய சிறப்பான கருணையினால் அந்த சிறப்பைப் பெரும்  தகுதிபெறுவோம். அந்தச் சிறப்புப் பிரிவுகளில் ஒரு குழுவை குர்ஆன் ‘உலுல் அல்பாப்’ என அழைக்கும், ‘அறிவுடைய மக்கள்’.

‘உலுல் அல்பாப்’ என்றால் யார்?

மனிதர்கள் ஒவ்வொருவருக்கும் பகுத்தறியும் ஆற்றலை அல்லாஹ் அருளியிருக்கிறான். அதை பலர் எப்படி வேண்டுமானாலும்  பயன்படுத்துவர்  ‘உலுல் அல்பாப்’ என்பவர்கள் பகுத்தறிவை எப்படி வேண்டுமானாலும்  பயன்படுத்தலாம் என்றிருக்க மாட்டார்கள், அதை அல்லாஹ் விரும்பும் முறையில் பயன்படுத்துபவர்கள் அவர்கள் வானத்தைப் பார்த்து  அதன் விசாலத்தையும் , அதன் எல்லையில்லா அழகையும் ,கண்டு  கருணையாளனும் ,  மிகச் சிறந்த படைப்பாளனும், அழகானவனும், அழகை விரும்புபவனும், நுட்பமானவனுமான அல்லாஹ்வின்  இருப்பையும், அவனது உயர்வையும்  உணர்வார்கள். 

உலுல் அல்பாபின் தன்மைகள்:

அல்லாஹ் படைத்த வானம், பூமி, மரங்கள், மலைகள், மலர்கள் இரவு பகல் மாறி மாறி வருவதும் கோடைக் காலத்தில் பகல் பொழுது  நீண்டும் இரவு குருகியும் அதேபகல் குளிர்க் காலத்தில் குருகியும் இரவு பொழுது நீண்டிருப்பதும்   , அதிலுள்ள இன்னும் பல அட்தாச்சிகளும் அவர்களுடைய இதயங்களுக்குள் மிக எளிதாக புகுந்து விடுகின்றன: அதனால், அவர்கள் இயல்பிலேயே இயற்கை அழகையும், வேத வெளிப்பாடையும்  விரும்பி  எந்நேரமும் அல்லாஹவைப் பற்றி நினைவுகூர்பவர்களாக , வேத்தை சிந்தித்து ஓதுபவர்களாக , தங்களுடைய வாழ்வில் எப்போதும் அவனது உயர்வான தன்மைகளைப் பற்றி உணர்ந்தவர்களாகவும் இருப்பார்கள்.. . . அத்தகையோர் நின்ற நிலையிலும், இருந்த இருப்பிலும் தங்கள் விலாப் புறங்களில் (சாய்ந்து) இருக்கும் போதும் அல்லாஹ்வை (நினைவு கூர்ந்து) துதிக்கிறார்கள்;. 

உலகில் நாம் காணும் அற்புதமான படைப்புகள் மனித அறிவை திகைப்படையச் செய்கின்றன. இந்த அற்புதங்கள் அனைத்தையும் படைத்து பரிபாலிக்கும் ஆற்றல் பெற்ற  ஒரே இறைவனை வணங்குவதே நியாயமானது என்பதை அந்த அறிவுடையோர்  உணர்கிறார்கள்.

மேலும் அவர்கள் தங்கள் இரட்சகா இந்த படைப்பினங்களில் எதையும் நீ வீனாக படைக்கவில்லை காரணம் நீயோ வீனான செயல்கள் யாவற்றையும்  விட்டும் மகாதூய்மையானவன் என்று கூறுவார்கள் 

 இது அவர்களின் முதல் தன்மையாகும் 

(இஃப்னு கஸீர் – இஃப்னு உஸைமீன்)

0Shares